திருப்பரங்குன்றம் ”தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்” : கந்தசஷ்டி பாடி முருகனை போற்றுவோம் : அண்ணாமலை உறுதி

Annamalai on Thiruparankundram Deepathoon : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நிச்சயம் தீபம் ஏற்றுவோம் என்று, அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.
Annamalai has firmly stated that he will definitely light the lamp at the Thiruparankundram Deepathoon.
Annamalai has firmly stated that he will definitely light the lamp at the Thiruparankundram Deepathoon.google
1 min read

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

Annamalai has firmly stated that he will definitely light the lamp at the Thiruparankundram Deepathoon : அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, தீபம் ஏற்றப்படுவதை தடுத்தது.

தமிழக அரசு அனுமதிக்கவில்லை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட தடையை சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பக்கம் இஸ்லாமியர் தொழுகை இடம் இருந்தால், அவர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்றம் உத்தரவு செயல்படுத்தப்படவில்லை

நீதிபதி சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டும், அதை அரசு செயல்படுத்தவில்லை. இந்தநிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, காணொலி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அண்ணாமலை வழிபாடு

அதில் முருகப்பெருமான் திருவுருவப் படத்திற்கு தீபாராதனை காட்டி வழிபடும் அவர், சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள நாள் இன்று என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்

இந்தநாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.

அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in