
திருப்பூரில் சிறப்பு எஸ்ஐ படுகொலை :
Annamalai on Tiruppur SI Shanmugavel Murder : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த மூர்த்தி அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் நேற்றிரவு குடிபோதையில், குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது மோதலாக வெடிக்க, மூர்த்தியை தங்கபாண்டியன் தாக்கினார். இதைபார்த்து, காவல்நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்க, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் அங்கு விரைந்தார்.
இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்ட அவர், காயமடைந்து இருந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், திடீரென எஸ்ஐ சண்முகவேலை (Tiruppur SI Shanmugavel Murder) அரிவாளால் வெட்டினான். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அழிவுப் பாதையை நோக்கி சமூகம் :
இந்த சம்பவம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ தமிழகத்தில் நேற்று இரவு சீருடையில் இருக்கும் போதை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொல்லப்பட்டு உள்ளாரக. நமது சமூகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருப்பதற்கான அறிகுறியாகும்.
மதுபோதைைையே முக்கிய காரணம் :
குற்றவாளிகள் அல்லது ஒரு சாதாரண மனிதர் கோபத்தில் ஒரு போலீஸ்காரர் மீது கொடூர தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் கொல்லத் தூண்டுவது எது? அவர்களின் மனசாட்சிப்படி, இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் ஏன்? அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தாலும், சில்லறை விற்பனையாளர்களாகச் செயல்படும் அரசாங்க கடைகளாலும், அதிக போதை உள்ள மதுக்களால் சாத்தியமாக்கப்பட்டது.
போதையால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு :
போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை எல்லா இடங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. குறிப்பாக கீழ் மட்டங்களில் உள்ள துணை ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே பொறுப்பு வகிப்பவர்கள் உட்பட அனைத்து போலீசாரும் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது.
போலீசாருக்கு தற்காப்பு ஆயுதங்கள் அவசியம் :
டேசர் துப்பாக்கிகள், பாடி கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் கொள்முதல் அதிகரித்தல், சிறந்த ரோந்து கார்கள், மிக முக்கியமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். போலீசார் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு 'நண்பர்' இல்லாமல் தனியாகச் செல்லக்கூடாது.
மேலும் படிக்க : சிறப்பு SI வெட்டிப் படுகொலை : கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு
முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி :
உயர்மட்டத்தில் எடுக்கப்படும் தவறான கொள்கை முடிவு, கீழ்மட்டத்தில் உள்ள சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கிறது. இது நமது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக உள்துறை அமைச்சரான, நமது முதல்வருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
=======