"அரசியலுக்காக பின்வாங்குவதா?” : மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு மீது அட்டாக் : அண்ணாமலை ஆவேசம்..!

மேகேதாட்டு அணை விவகாரத்தில், அரசியலுக்காக மத்திய அரசு பின்வாங்குவதாக, அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.
Annamalai sharply criticized Central Government backing down on Mekedatu dam issue for political reasons
Annamalai sharply criticized Central Government backing down on Mekedatu dam issue for political reasonsAI generated
1 min read

மேகேதாட்டு அணை விவகாரம்

மேமேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி கர்நாடகத்திற்கு தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசுக்கு கர்நாடகம் அழுத்தம்

தமிழகத்துக்கு பெரும் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. டெல்லியில் முகாமிட்டுள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், தங்கள் மாநில எம்பிக்களை ஒன்று திரட்டி, அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகிறார்.

அண்ணாமலை ஆவேசம்

இது தொடர்பாக வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது காட்டமான கருத்துகளை முன்வைத்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரின் பதில் அதிர்ச்சி

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த...

காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என...

மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தின் அனுமதி தேவையில்லையா?

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை.. கர்நாடகாவிடம் திட்ட அறிக்கை கேட்ட மத்திய அரசு கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க...

மத்திய அரசு விளக்கம்

கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.

தமிழகத்தின் நலனை புறக்கணிப்பதா?

தேர்தல் அரசியலுக்காக இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

முக்கிய விவகாரங்களில் ஒரே நிலைப்பாடு அவசியம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

நல்லுறவு பாதிக்கப்பட கூடாது

தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்...

சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்

காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in