

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் ‘அரோகரா’ என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
முருகப்பெருமானின் திருவிழாவில் எழுப்பப்படும் பக்தி முழக்கத்தை அரசியல் தலைவர்களை புகழ்வதற்கு பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், ‘அரோகரா’ என்பது முருகப்பெருமானை போற்றி பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காக பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்றும், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முருகபெருமானின் திருவிழாவையும் பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்கு பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகப்பெருமானை வழிபடும் வகையில் பக்தர்களால் முழங்கப்படும் ‘அரோகரா’ என்ற கோஷம், அரசியல் தலைவர்களை புகழ்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
=====================