மத்திய அரசை கடுமையாகச் சாடிய அண்ணாமலை : “AI முதல் ஒலிம்பிக்ஸ் வரை எல்லாமே குஜராத்துக்கே ஏன்! : சரிமாரி கேள்வி..!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
Annamalai Slams Central Government: “Why Is Everything from AI Projects to the Olympics Going to Gujarat?”
Annamalai Slams Central Government: “Why Is Everything from AI Projects to the Olympics Going to Gujarat?”Ai Generated
1 min read

மத்திய அரசை விமர்சித்த அண்ணாமலை :

சமீபத்தில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் வீ தி லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை, நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக மத்திய அரசின் அணுகுமுறையை கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள், செமிகண்டக்டர் மற்றும் வேஃபர் தொழிற்சாலைகள், சர்வதேச விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் குஜராத்தில் மட்டுமே குவிக்கப்படுவது குறித்து அவர் விமர்சனம் செய்தார்.

எல்லாமே குஜராத்துக்கே செல்ல முடியாது:

நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கக் கூடாது என்று அண்ணாமலை கூறினார்.

இந்தியாவின் பல மாநிலங்கள் தொழில், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தில் முன்னேறியுள்ள நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் குவிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல என அவர் தெரிவித்தார்.

AI மற்றும் செமிகண்டக்டர் திட்டங்கள் குறித்து கேள்வி :

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான AI தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் ஏன் தொடர்ந்து குஜராத்தை நோக்கிச் செல்கின்றன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இந்தத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டு போட்டிகளும் குஜராத்துக்கே:

காமன்வெல்த் போட்டிகள், உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு போட்டிகள், 2036 ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் முன்மொழிவு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் குஜராத்தை மையமாகக் கொண்டு திட்டமிடப்படுவது குறித்தும் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்தார்.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் பல மாநிலங்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வளர்ச்சி அவசியம் :

மத்திய அரசின் வளர்ச்சி கொள்கைகள் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பயன் அளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் சில மாநிலங்களில் மட்டுமே குவியாமல், நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதே உண்மையான கூட்டாட்சி வளர்ச்சி முறை என அவர் கூறினார்.

அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்ற கருத்து :

இந்த விவகாரமானது அரசியல் தலைவராகள் மத்தியில் பெரும் கவனத்தையும் குறிப்பாக, மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி சமநிலை குறித்த விவாதத்தை இந்தப் பேச்சு மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in