”சட்டம்,ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு” : நிலைமையை கணித்து வாக்களியுங்க : அண்ணாமலை பிரசாரம்!

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது, இதை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
Annamalai urged people to remember when voting, as law and order deteriorated in Tamil Nadu ilast five years
Annamalai urged people to remember when voting, as law and order deteriorated in Tamil Nadu ilast five yearshttps://x.com/annamalai_k
1 min read

அண்ணாமலை பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்து தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.

திமுக வேட்பாளரின் பெருமை

”அமலாக்கத் துறையை முதன்முதலாக வேடசந்தூருக்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் ரெய்டு நடத்திய பெருமை திமுக வேட்பாளருக்கு சேரும்.

காவிரி நீரை கொண்டு வருவோம்

பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லம் கொடுத்தவர்கள் திமுகவினர். என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வேடசந்தூர், வடமதுரை பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டுவந்து குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

வேடசந்தூர் தொகுதியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நீங்கள் பரமசிவத்தை ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சரித்திரம் மிக்க மசோதாவை கொண்டுவந்துள்ளனர். 33 சதவீத மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதா மகளிருக்கு உதவி செய்யும்.

ஸ்டாலின் போய் சொல்கிறார்

முதல்வர் ஸ்டாலின் பொய்பேசி வருகிறார். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி இடங்கள் 39 ல் இருந்து 59 என உயர்த்தியுள்ளனர்.

அதிகாரத்தில் மகளிர் பங்கு

எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீத உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகளிரை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல மகளிர் இட ஒதுக்கீட்டை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

முதல்வர் ஒரு பொம்மை

முதல்வர் ஒரு பொம்மை, கீ கொடுத்தால் காலையில் டெல்லி, மதியம் இந்தி, மாலையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக

வேடசந்தூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவற்றவில்லை. பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றியுள்ளது. அதேபோல் நீங்கள் முதல்வரை மாற்றிவிடுங்கள்.

திமுக வேட்பாளர் சாமிநாதன் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்பதை மறந்து விடாதீர்கள்.

இப்படித்தான் கரூர் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். அதனால் அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள்”. இவ்வாறு அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in