”செய்யாறில் சிறுமி பாலியல் வன்கொடுமை” : பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! : அண்ணாமலை, டிடிவி கடும் கண்டனம்...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக அரசுக்கு அண்ணாமலை, டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Annamalai,TTV strongly condemned DMK government over the gang rape of a 15-year-old girl near Cheyyar
Annamalai,TTV strongly condemned DMK government over the gang rape of a 15-year-old girl near Cheyyargoogle
2 min read

15 வயது சிறுமிக்கு வன்கொடுமை

இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ”திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது.

சட்டம், ஒழுங்கு முழு தோல்வி

இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது.

இருண்ட நிலையில் தமிழகம்

கடந்த 5 ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது.

தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்

இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில் தமிழகத்தை தி.மு.க ஆட்சி இன்று தள்ளியிருக்கிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

முழு பாதுகாப்பு அவசியம்

சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று” அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

அதிர்ச்சியான செய்தி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ”செய்யாறு அருகே சுப நிகழ்வில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

மக்களை ஏமாற்றும் திமுக

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுகவின் அலட்சியத்தை அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே தோலுரித்துக் காட்டுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியால் பெருமை

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தமிழகம், திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது.

குற்றவாளிகளை உடனே கைது செய்

எனவே, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்” என தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in