1 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டுத் தேர்வு, முன்கூட்டியே நடத்த திட்டம் : அன்பில் மகேஷ் அறிவிப்பு!

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் 1 - 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
Annual exams for classes 1 to 9 planned to be held early: Anbil Mahesh announces!
Annual exams for classes 1 to 9 planned to be held early: Anbil Mahesh announces!source:google
1 min read

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்ட மன்ற தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வை ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

10,12 பொதுத்தேர்வு

தமிழகத்தில் தற்போது தொடங்கியிருக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதியும் நிறைவடைகிறது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஏப்.6-ஆம் தேதியும் நிறைவு பெற உள்ளது . இதற்கிடையே

ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல்

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இரண்டாவது மாதத்தில் அல்லது மூன்றாவது மாதத்தில் தான் ஆண்டு இறுதித் தேர்வு நிறைவடையும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தோ்தல் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள்

தோ்தலுக்கான வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைப்பது வழக்கம் என்பதால் அந்த நேரத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு என்பதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக மாநில பாடத்திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வுகளை முன்கூட்டியே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களின் முடிவு

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் பொதுத்தோ்வு இல்லை என்பதனால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தோ்வு நடைபெறும் தேதிகளை முடிவு செய்வா்.

ஏப்ரல் 2ஆம் வாரத்தில் ஆண்டுத் தேர்வு நிறைவு

அதைத்தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in