

தமிழக சட்டமன்ற தேர்தல்
Leaving aside the assembly elections, the DMK-AIADMK alliance is facing a challenge as to who will be given the 6 vacant Rajya Sabha seats : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை திமுக, அதிமுகவில் களை கட்டி இருக்கிறது.
திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம்பெற்று இருக்கும் கட்சிகள் அதிகாரத்தில் பங்கு, அதிக சீட் என்ற டிமாண்ட் வைத்து அறிவாலயத்தை கொதிநிலையில் வைத்துள்ளன.
அதிமுக கூட்டணி
அதிமுகவை பொருத்தவரை ஏற்கனவே சில கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, திடீரென திமுகவுடன் கைகோர்த்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை யாரும் கூட்டணி என சேரவில்லை. இருப்பினும் மக்கள் ஆதரவு ஒன்றை மட்டுமே நம்பி தனித்து களம் காண்கிறது தவெக.
ராஜ்யசபா சீட் - குறிவைக்கும் கட்சிகள்
சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து இருக்கும் நிலையில், கூட்டணிக்கு வரும் கட்சிகள் அல்லது ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கட்சிகள் பெரும்பாலும் ராஜ்யசபா சீட்டை குறிவைக்கின்றன.
‘ப்ளஸ் ஒரு ராஜ்ய சபா சீட்’ என்ற கோரிக்கை திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் ஒலித்து வருகிறது. ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் வருகிறது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன. இதில் திமுக நான்கு இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் பெற உள்ளன.
திமுக, அதிமுகவுக்கு குடைச்சல்
இருப்பதோ 6 சீட்கள், கேட்பதோ பல கட்சிகள், எப்படிச் சமாளிப்பது, யாருக்கு சீட் ஒதுக்குவது என்பது இம்முறை திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
தங்கள் கட்சி சார்பில் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கும் சிலருக்கு மீண்டும் சீட் வழங்க வேண்டிய கட்டாயமும் திமுக, அதிமுகவுக்கு உள்ளது. இந்தநிலையில், கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பது பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.
விடைபெறும் எம்பிக்கள்
திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு, அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அன்புமணி, ஜி.கே. வாசன்
அதிமுக கோட்டாவில் ஒன்றை அன்புமணிக்கு ஒதுக்குவதாக ஏற்கெனவே பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எஞ்சி இருக்கும் ஒரு சீட்டை சொந்தக் கட்சிக்கு ஒதுக்கினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியால், உட்கட்சி பூசலை சமாளிக்க முடியும்.
ஆனால், அந்த இடத்தை மீண்டும் அதிமுக தனக்கு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஜி.கே.வாசன்.
எம்பியாக தினகரன் ஆர்வம்
இவரைப் போலவே, அதிமுக கோட்டாவில் ராஜ்யசபாவுக்குச் செல்ல அமித் ஷா மூலம் தினகரனும் முயற்சி எடுத்து வருகிறார்.
எனவே, யாருக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது என்ற குழப்பம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டு இருக்கிறது.
திமுகவிலும் முட்டல், மோதல்
திமுக தரப்பிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் வரிசை கட்டி நிற்கின்றன . தங்கள் வசம் உள்ள நான்கு சீட்களில் ஒன்றை நிச்சயம் மீண்டும் திருச்சி சிவாவுக்கு ஒதுக்க திமுக தலைமை உறுதியாக இருக்கிறது. ம
காங்கிரஸ், மதிமுக, விசிக
மற்றோரு சீட்டையும் கட்சியினருக்கு ஒதுக்கி விட்டு, எஞ்சிய இரண்டில் ஒன்று தேமுதிக, மற்றொன்று காங்கிரஸ் அல்லது மதிமுக அல்லது விசிகவுக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் எனத் தெரிகிறது. எனவே, என்ன செய்வது என்று தெரியாமல், திமுகவும், அதிமுகவும் கலக்கத்தில் உள்ளன.
திராவிட கட்சிகளுக்கு சவால்
234 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி பங்கீடு என்பதை விட, ராஜய்சபாவில் 6 சீட்களை ஒதுக்குவது தான் திராவிட கட்சிகள் முன் இப்போது நிற்கும் பெரிய சவாலாக உள்ளது.
==============