

ஐந்து மாநிலத் தேர்தல்
Abhin Dinesh Modak, IPS, assumes charge as the 111th Commissioner of Greater Chennai Police : தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்து வருகிறது.
தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் மாற்றியது.
புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டு, அவர் உடனடியாக பதவியேற்றார்.
இதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. மாற்றத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னை காவல் ஆணையர் மாற்றம்
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய காவல் ஆணையர் அபின் தினேஷ்
புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ்-ஐ நியமித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் அவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் இந்த அபின் தினேஷ் மோதக்
குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்து வருகிறார் அபின் தினேஷ் மோதக்.
1997ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், மாநில குற்ற ஆவணக் காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவிலும், சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
======