

2012ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் அருண்.
கடந்த ஆண்டு எஸ்பியாக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் கமாண்டராக எஸ்பி அந்தஸ்தில் அவர் பணி புரிந்து வந்தார்.
அவருடன் பணியில் சேர்ந்த சக அதிகரிகளான கார்த்திக், சங்கு ஆகியோருக்கு எஸ்பி அந்தஸ்தில் பதிவு உயர்வு கிடைத்தது.
அவர்கள் சென்னையில் துணை கமிஷனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து விலகுவதாக அருண் அறிவித்தார்.
அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தாலும், உயரதிகாரிகளான ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி. ஜெயராமன் ஆகியோர், அருணை சமாதானம் செய்ததாக செய்திகளும் வெளியாகின.
இதனிடையே காவல் அதிகாரி அருண், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்தும் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
டிஜிபி. சங்கர் ஜிவால் அழைத்து பேசியும், ராஜினாமா முடிவில் அருண் உறுதியாக இருந்த நிலையில், அவரது கடிதத்தை ஏற்று, பணியில் இருந்து விடுவிப்பதற்கான நகல் நேற்று வழங்கப்பட்டது.
கனவுகளோடு வந்து, 13 ஆண்டுகள் ஐபிஎஸ் வேலை பார்த்த பிறகு விலகியது குறித்து காவல் அதிகாரி அருண் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தார்.
வெளிப்படையாக எந்த கருத்தை தெரிவிக்கா விட்டாலும், ” தமிழக காவல் துறையில் அதிகாரியாக 13 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.
இனி எல்லாம் முடிந்துவிட்டது, அரசு உத்தரவும் கிடைத்துவிட்டது.
எவ்வளவோ மனக்கசப்புகள் உள்ளன, அவற்றை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை.
ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை என்றும்” அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையில் சாதிக்க வேண்டும் என்று முனைப்புடன் பணியில் சேர்ந்த அருண், பதவியில் இருந்து விலகி இருப்பது பல்வேறு யூகங்களை உருவாக்கி இருக்கிறது.
----