

Polling for the Assembly by-elections in the Maduranthakam and Dharapuram constituencies concluded peacefully
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அக்.6ல் இடைத்தேர்தல்
பின்னர் அவர்கள் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இத்தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
5 முனைப்போட்டி
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட், ஜானகிராமன் (நாதக) உள்ளிட்ட 28 பேர் களத்தில் இருந்தனர்.
தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ( தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா(நாதக) உள்ளிட்ட 22 பேர் களத்தில் இருந்தனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
நேற்று காலை 7 மணி முதல் இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மதுராந்தகத்தில் பிற்பகலுக்கு மேல் வாக்குப்பதிவு விறுவிறுப்பை எட்டியது. ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தாராபுரம் தொகுதியில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
லை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தநிலையில்,இறுதி நேரத்தில் வந்த வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மதுராந்தகம் 86.26%, தாராபுரம் 80.30%
இறுதி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 92.30 சதவீதமும், தாராபுரத்தில் 89.9 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
9ம் தேதி வாக்கு எண்ணிக்கை
9ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி இடைத்தேர்தல்
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின. இது கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.
============