

ஆட்சி அமைக்கும் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கிறது. இந்த தேர்தலில் முகமே தெரியாத தவெக வேட்பாளர்களிடம் திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.
தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி, மூத்த அமைச்சர்கள் வரை பலர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் அமைச்சருமான துரைமுருகன் (காட்பாடி)
மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை)
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (மதுரை )
அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூர்)
டி.ஆர்.பி ராஜா (மன்னார்குடி)
சா.மு. நாசர் (ஆவடி)
தா.மோ அன்பரசன் (ஆலந்தூர்)
மூர்த்தி (மதுரை கிழக்கு)
கீதா ஜீவன் (தூத்துக்குடி)
முத்துசாமி (ஈரோடு மேற்கு)
மதிவேந்தன் (ராசிபுரம்)
ஆர். ராஜேந்திரன் (சேலம் வடக்கு)
சாமிநாதன் (காங்கேயம்)
காந்தி (ராணிப்பேட்டை)
பெரியகருப்பன் (திருப்பத்தூர்)
சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்)
ஓபிஎஸ், வைத்திலிங்கம் வெற்றி
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற ஓ பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்களும் தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தனர்
ஜெயக்குமார் (சென்னை ராயபுரம்)
பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி)
பா. வளர்மதி (சென்னை ஆயிரம்விளக்கு)
கோகுல இந்திரா (சென்னை அண்ணாநகர்)
தங்கமணி (குமாரபாளையம்)
ராஜேந்திர பாலாஜி (சிவகாசி)
திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்)
ஆர்.பி உதயகுமார் (திருமங்கலம்)
உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.
அதைசமயம், அதிமுக சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் 16 பேர் வெற்றி பெற்றனர்.
திராவிட கட்சிகள் மீது வெறுப்பா?
திராவிட கட்சிகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்கள், அதிமுக, திமுகவுக்கு எதிரான வாக்குகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் வாக்குகள் தவெகவுக்கு அதிக அளவில் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
மாற்றத்தை ஏற்படுத்திய விஜய் பிரசாரம்
விஜயின் இறுதி நாள் பிரச்சாரம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே தங்களுக்கு எதிர்பாராத அளவில் வாக்குகள் கிடைத்திருப்பதாக வியக்கின்றனர்.
திராவிட பிரமுகர்கள் அதிர்ச்சி
தமிழக வெற்றிக் கழகத்தால் தோல்வியடைந்த வேட்பாளர்கள், தங்கள் அரசியல் அனுபவத்தில் இது போன்று மக்களின் மனநிலையை பார்த்ததில்லை எனவும், மக்களின் கணிப்பையே யூகிக்க முடியாத நிலைமையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
வாக்கு சேகரித்த குழந்தைகள்
நிறைய குடும்பங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரை வற்புறுத்தி அதிக அளவில் விஜய்க்கு வாக்களிக்க வைத்ததும் ஒரு காரணம் என்கின்றனர்.
=====