சட்டமன்ற தேர்தல் : 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் ; தேர்தல் வாக்குறுதிகள் ஒரு பார்வை!

நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் விஜயை தலைமையிலான தவெக பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது
Assembly elections: Tamil Nadu Victory Party wins 108 seats; A look at election promises
Assembly elections: Tamil Nadu Victory Party wins 108 seats; A look at election promises google
2 min read

தேர்தல் முடிவு 2026

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது. இது தமிழக தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தமிழக்தின் பெரும்பான்மையின தொகுதிகளில் த வெகவின் வேட்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவிகிதம்

026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொகுதிவாரியாக அவர்களின் வாக்கு விவரங்கள்.

பெரம்பூர்: ச. ஜோசப் விஜய் - 1,19,640

ஆர்.கே. நகர்: மரிய வில்சன் - 97,800

எழும்பூர்: ராஜ்மோகன் - 53,901

கொளத்தூர்: வி.எஸ். பாபு - 82,015

மயிலாப்பூர்: வெங்கட்ரமணன் - 69,619

அண்ணா நகர்: வி.கே. ராம்குமார் - 71,௩௭௫ போன்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்

தமிழகத்தில் 5 ஆண்டுகளை ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தற்போது தோல்வியை சந்தித்துள்ளது .குறிப்பாக திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தோல்வியையே சந்தித்தனர்.

இந்த நிலையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது பதவியயை ராஜினாமா செய்தார்

தவெக ; தேர்தல் வாக்குறுதி ஒரு மறுபார்வை

தேர்தலுக்கு முன்பான தனது தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சியின் வாக்குறுதியை அறிவித்திருந்தார் விஜய் , தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையிலான வாக்குகளை பெற்று வெற்றி கண்டுள்ளார். இந்த நிலையில் வர அறிவித்த வாக்குறுதிகள்

வெற்றி மகளிர் திட்டம்

ஒவ்வெரு பெண்ணையும் அதிகார மிக்கவராக உறுதி செய்வதே இந்த வெற்றி மகளிர் திட்டத்தின் சிறப்பியல்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

உலகம் தரம் வாய்ந்த கல்விக்கான உத்திரவாதம்

100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும் , வேலையில்லாத பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் 6 ம் வகுப்பு வரை கல்வியை உறுதி செய்யும் உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்படும்

பிணையில்லா கல்வி கடன் '

இளங்கலை முதல் , மேற்படிப்பு வரை ரூபாய் 20 லட்சம் பிணையில்லா கல்வி கடனாக வழங்கப்படும் என்றும் தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது

மகளிருக்கு வேண்டுகோள்

தேர்தல் நடைபெறும் நாளன்று அனைத்து மகளிரும் தங்களின் வீட்டின் முன் விசில் கோலம் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகள்

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும்.

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவெக அரசால் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

பதவி உயர்வில் ஊழல் ஒழிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கான இடமாற்றங்கள் (Transfer) முற்றிலும் வெளிப்படையான முறையில், காலவரையறைக்கு உட்பட்டு நடைபெறும்.

சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு

AI தொழில்நுட்பம் மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விண்ணப்பிக்காமலே நேரடியாக மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும்.

சேவை உரிமைச் சட்டம்

வெற்றித் தமிழ்நாடு சூப்பர் ஆப் மூலம் அனைத்துச் சேவைகளும் மொபைலில் கிடைப்பதோடு, சேவையைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கையும் உறுதி செய்யப்படும்.

மக்கள் அரங்கம்

சட்டமன்றத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விவாதம் நடத்துவதும், அதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிப்பதும் சட்டப்படிக் கட்டாயமாக்கப்படும்

AI மற்றும் டிஜிட்டல் தலைநகர்

இந்தியாவின் முதல் 'செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் பிரத்யேக AI CITY மூலம் (000 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாடு இந்தியாவின் Al மற்றும் டிஜிட்டல் தலைநகராக மாற்றப்படும்.

மேலும் விவசாய குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் தமிழக வெற்றி கழகம் வாக்குறுதி அளித்துள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in