

Attention Rail Passengers: One-way Special Train Service Between Nagercoil and Chennai Egmore Tomorrow!
கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், ஜுன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
தெற்கு ரயில்வே அதிரடி
இதனால் ரயில் நிலையங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ஒருவழி சிறப்பு ரயில்
அதன்படி, நாகர்கோவிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி நாளை (மே 31, ஞாயிற்றுக்கிழமை) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரயில் இயக்க விவரங்கள் மற்றும் நேரங்கள்
வண்டி எண்: 06196 (ஒருவழிச் சிறப்பு ரயில்)
புறப்படும் இடம் & நேரம்: நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நாளை (மே 31) பகல் 11:45 மணிக்கு புறப்படும்.
வந்தடையும் இடம் & நேரம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதே நாள் இரவு 11:55 மணிக்கு வந்தடையும்.
முக்கிய நிறுத்தங்கள்
இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக சென்னை எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தகவல்
இந்தச் சிறப்பு ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று (மே 30, சனிக்கிழமை) காலை 8:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ள ரயில் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
=======