Ayudha Puja: ஆயுத பூஜை 2025: என்னென்ன பொருட்கள், வழிபடுவது எப்படி?

Ayudha Pooja 2025 Date And Time in Tamil : ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில், என்னென்ன பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Ayudha Puja celebrated tomorrow, let's find out items should be used to perform the puja
Ayudha Pooja 2025 Date Celebration At Home
2 min read

நவராத்திரி விழா 2025 :

Ayudha Pooja 2025 Date And Time in Tamil : ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி, இந்தியாவில் பெரிய பண்டிகைகளில் ஒன்று. மூன்று மூன்று நாட்களாக பிரித்து முப்பெரும் தேவியரை கொண்டாடுவர். வட மாநிலங்கள் குறிப்பாக மேற்கு வங்கத்தில் துர்கை சிலைகளை பொது இடங்களில் அமைத்து வழிபாடு நடத்துவர். தென்னிந்தியாவில் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விழா(Navaratri 2025) உற்சாகமாக கொண்டாடப்படும்.

ஆயுதங்களை வழிபட்ட துர்க்கை :

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் மகிஷாசூரனை வதம் செய்ய அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு துர்க்கை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன(Ayudha Pooja Celebration in Tamil). இதனால் தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுகிறோம்.

நவராத்திரி கொண்டாடுவது எப்படி? :

வீடு, வாசல், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து அவற்றின்மீது திருநீற்று பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்(How To Celebrate Ayudha Pooja in Tamil). மாவிலை தோரணங்கள், பூக்களை கட்டி தொங்க விடவேண்டும். வீட்டின் வரவேற்பறை தொடங்கி சமையலறை வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்து, அவற்றுக்கும் குங்குமம், சந்தனம் இட்டு, மலர் சூட வேண்டும்.

பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். சரஸ்வதி தேவியை(Saraswati Pooja) வழிபடுவதற்கு முன்பு எல்லா வினைகளையும் தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

பிள்ளையார் வழிபாடு :

பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்கும பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப, பூஜையறையில் புத்தங்கள், பேனா, பென்சில்களை வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

வீட்டு கருவிகளுக்கு வழிபாடு :

வீட்டு உபயோக(Ayudha Pooja Celebration At Home in Tamil) கருவிகளான அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றையும் சுத்தம் செய்து, பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்கள், பயன்படுத்தும் பொருட்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

வாகனங்களுக்கும் வழிபாடு :

பேருந்து, லாரி, ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர்(Ayudha Pooja for Bike, Car) வாகனங்களை கழுவி, சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெளிக்கலாம். சந்தனம், குங்குமம் வைத்து, மாலைகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

மேலும் படிக்க : குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 2025 : கொடியேற்றத்துடன் தொடக்கம்

பொரி, அவல் வைத்து தீபாராதனை :

நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்(Ayudha Pooja 2025 Worship in Tamil). அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்களுக்கும் தீபாராதனை காட்டி பூஜை செய்து துர்க்கையின் அருளை பெற வேண்டும்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in