டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு தடை: FSSAI சோதனையில் அதிர்ச்சித் தகவல்!

செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதால் என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்ய FSSAI தடை விதித்துள்ளது.
Ban on 11 types of liquor at TASMAC shops: Shocking findings from FSSAI inspection!
Ban on 11 types of liquor at TASMAC shops: Shocking findings from FSSAI inspection!source: google
1 min read

The FSSAI has banned the sale of 11 varieties of Enrica brand alcoholic beverages at TASMAC outlets due to the addition of artificial flavoring agents.

11 வகை மதுபானங்களுக்கு தடை

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகை என மொத்தம் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI நடத்திய சோதனையில், இந்த 11 வகையான மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ரிகா நிறுவன தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடு

என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த 11 வகை மதுபானங்களைக் குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதையும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்தவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல்

மறுஉத்தரவு வரும் வரை இந்தத் தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட ரகங்கள்

VSOP எக்சா கோல்ட் பிராந்தி, மெக்டொவல்ஸ் பிராந்தி, ஹனி பீ பிராந்தி, என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் உட்பட என்ரிகா நிறுவனத்தின் 11 பிரபல மதுபான ரகங்களின் விற்பனை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : ஏ.ஐ.யால் புதிய வேலைவாய்ப்பு புரட்சி; பட்டம் இல்லாமலும் சாதிக்கலாம்: மார்க் ஜக்கர்பெர்க் கணிப்பு...

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in