Vettri Tamil Nadu Investment Conclave : தொழில் முதலீடுகள், மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள், முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம், எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு பலன் கிடைத்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
benefits accrued to various districts through investors' conference held under Chief Minister Vijay
benefits accrued to various districts through investors' conference held under Chief Minister Vijaygoogle
2 min read

முதலீட்டாளர் மாநாடு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் வாயிலாக தவெக அரசு அமைந்த 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கான வேலைவாய்ப்புக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கிடைத்துள்ள முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர்

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் : தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது.

இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்து, 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் : தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார். மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்கவுள்ளது.

இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்து. 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

ஆவிட் குழுமம் (Avid Group) : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம்,

ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

முதற்கட்டமாக, 7,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 12,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு செய்கிறது.

YKK. ஜப்பான் : திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம், ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கவுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தியாளரான YKK, இதற்காக 1,651 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க போகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

அல்ட்ராவயலட் : கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம். மின்சார

இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை (OEM) அமைக்கவுள்ளது.

இதற்காக 779 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

சென்னை மாவட்டம் :

சூப்பர் மைக்ரோ : சென்னையில், அமெரிக்காவைச் சேர்ந்த Fortune 500

(தரவரிசை 292) நிறுவனமான சூப்பர் மைக்ரோ. சர்வர்கள் (Servers) உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது.

இதற்காக 477 கோடி ரூபாய் முதலீடு செய்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் : ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது.

குஜராத்திற்கு வெளியே இந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும்.

இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் :

பிட்சர் (BITZER), ஜெர்மனி : ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் முன்னணி HVAC கம்ப்ரசர் உற்பத்தியாளரான BITZER, இந்தியாவில் தனது முதல் HVAC கம்ப்ரசர்கள் உற்பத்தி ஆலையை சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.

JK டயர் : JK டயர் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது டயர் உற்பத்தித் திட்டத்தை 5,143 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், விரிவாக்கம் செய்ய உள்ளது.

8 திட்டங்களுக்கு அடிக்கல்

மாநாட்டின் நிறைவாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4 ஆயிரத்து 476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

5 திட்டங்கள் தொடங்கி வைப்பு

2 ஆயிரத்து 676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

----------------------------------

logo
Thamizh Alai
www.thamizhalai.in