

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
தேசிய அளவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு மேற்கொள்வது தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு. இதுல முதற்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடந்துச்சு. இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு, 2027 பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட இருக்கு.
இதனோட சிறப்பு என்னன்னா? இந்தியாவின் முதல் டிஜிட்டல் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். தரவுகள் முழுவதும் மொபைல் செயலி மூலம் சேகரிக்கப்படும்.
சாதிவாரியாக முழுமையான விவரம் கிடைக்காது
மத்திய அரசு நடத்துற மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில தரவுகள் மட்டுமே கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு மாநிலங்களில் இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு போன்ற சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
எனவே தான் ஒவ்வொரு மாநிலமும் தங்களோட தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்விக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒண்ணா இருக்கு. இதைத்தான் 'சமூகநீதி கணக்கெடுப்பு' அப்படின்னு சொல்றோம்.
நான்கு மாநிலங்களில் சமூகநீதி கணக்கெடுப்பு
இந்தியாவில நான்கு மாநிலங்கள் சமூகநீதி அல்லது சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமா நடத்தி முடிச்சு இருக்கின்றன. இதுல முதல்ல நிற்பது பிகார். சுதந்திர இந்தியாவில் முதன்முறையா அனைத்துச் சாதிகள் மற்றும் உட்பிரிவுகளைக் கொண்ட முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பை 2023லேய வெற்றிகரமா நடத்தி அறிக்கையை வெளியிட்டது அம்மாநில அரசு
அடுத்ததா, கர்நாடகம், தெலங்கான, ஆந்திர மாநிலங்களும் தங்கள் மாநில மக்களோட சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை துல்லியமாக காட்டும் விரிவான குடும்ப அடிப்படையிலான சாதி கணக்கெடுப்பை நடத்தின.
தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பு
சமூகநீதிக்கு முன்னுரிமை கொடுக்கிற தமிழ்நாட்டுலேயும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தணும் அப்படிங்கிற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருது.
சாக்கு சொல்லிய திமுக அரசு
2021 முதல் 2026 வரை ஆட்சியில இருந்த திமுக, இதை மத்திய அரசு தான் செய்யணும், மாநில அரசால செய்ய முடியாது அப்படின்னே சொல்லி, காலத்தை தள்ளுச்சு.
தவெக அரசு வாக்குறுதி
தவெக அரசு தனது ஆளுநர் உரையில, மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி முடிச்ச பிறகு, தமிழ்நாட்டில் 'சமூகநீதி கணக்கெடுப்பு' நடத்தப்படும் தெரிவிச்சு இருந்திச்சு.
'சமூகநீதி கணக்கெடுப்பு ஆணையம்'
அதன்படி, தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கிற 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், சமூக நீதி கணக்கெடுப்பை நடத்த வசதியா, ஆணையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கு. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 'சமூகநீதி கணக்கெடுப்பு ஆணையம்' அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்படும்.
சமூகங்களின் பொருளாதார நிலை தெரியும்
மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது ஒரு சமூகத்தில் எவ்வளவு பேர் வாழுறாங்க என்று தெரிஞ்சுக்கலாம். ஆனா, அவங்களோட பொருளாதார நிலைமைய தெரிஞ்சிக்க முடியாது. எண்ணிக்கை அடிப்படையில சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதால எந்த பலனும் சேர வேண்டியவங்களுக்கு முழுமையா போய்ச் சேராது.
சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு, குடும்ப வருமானம் உள்ளிட்ட விவரங்களையும் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நிலை
இதன் மூலம் எந்தெந்த சமூகங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளன? பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்கள் எத்தனை உள்ளன? அரசின் நலத்திட்டங்கள் உரிய மக்களை சென்றடைகின்றனவா என்பன போன்ற கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக விடை கிடைக்கும்.
சமூகங்களின் முழு விவரம் தெரிய வரும்
சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது இடம் பெறும் விவரங்கள் எப்படி இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், கல்வியறிவு, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் கல்வியை தொடர்வதில் உள்ள தடைகள் தெரிய வரும்,
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு, தொழில் விவரங்கள், வேலைவாய்ப்பில் கிடைக்கும் பிரதிநிதித்துவம், குடும்ப வருமானம், நிலம் மற்றும் சொத்து உரிமை உள்ளிட்ட வாழ்வாதார விவரங்கள் முழுமையா கிடைக்கும்.
அரசு வழங்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பிற நலத்திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைந்துள்ளதா போன்ற தகவல்களும் தமிழக அரசின் சமூகநீதி கணக்கெடுப்பில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுது.
சமூகநீதியை நிலைநாட்டும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையையும் சட்டப்பூர்வ நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துணும் அப்படின்னா, சமூகங்களின் மக்கள்தொகை, கல்வி முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புப் பிரதிநிதித்துவம் தொடர்பான தரவுகள் அவசியம் தேவை.
அப்போது தான் ஒரு சமூகத்தின் மக்கள்தொகை, கல்வி,வேலைவாய்ப்பில் அவங்களுக்கான பிரதிநிநித்துவம், நடைமுறையில் இருக்கும் வேறுபாடுகள் தெரிய வருவதால, அதன் அடிப்படையில், சமூகநீதி கொள்கைகளை வகுத்து, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தலாம் அப்படின்னு சொல்லப்படுது.
ஏமாற்றிய திமுக, நிறைவேற்றும் தவெக
மத்திய அரசை காரணம் காட்டி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாம, திமுக ஏமாற்றிய நிலையில, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, அதை நடத்த முன்வந்து இருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்று இருக்காங்க. சமூகநீதி மாநிலமா 69 சதவீத இட ஒதுக்கீட்டை கடைபிடிக்கும் தமிழகம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமா, அனைத்து சமூக மக்களுக்கும் சரியான, கல்வி, வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் மாநிலமாக திகழ இருக்கு.
===============