விசாரணையில் தொய்வு, பொய் தகவல்கள் : ரிதன்யாவின் தந்தை வேதனை

Rithanya Dowry Case Issue : தனது மகள் ரிதன்யா தற்கொலை வழக்கில் விசாரணை தொய்வாக இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அவரது தந்தை அண்ணாதுரை வேதனை தெரிவித்துள்ளார்.
Tiruppur Rithanya Father Annadurai on Dowry Case Investigation Issue
Tiruppur Rithanya Father Annadurai on Dowry Case Investigation Issue
1 min read

ரிதன்யா தற்கொலை வழக்கு :

Rithanya Dowry Case Issue : திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ரிதன்யா, கணவர் வீட்டார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் ரிதன்யா அனுப்பிய ஆடியோ(Rithanya Audio) தகவல், தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும், அதன் பின்னர் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டனர். சித்ராதேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

குற்றம் இழைத்தோருக்கு சரியான தண்டனை :

இந்தநிலையில், ரிதன்யாவின் தந்தை(Rithanya Father) அண்ணாதுரை, கோவையில் உள்ள காவல்துறை ஐஜி அலுவலகத்தில் மனு ஒன்று இன்று கொடுத்தார். பின்னர் பேசிய அவர், சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை போட்டு தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ செய்கிறேன் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ரிதன்யா தற்கொலை - சிபிஐ விசாரணை தேவை :

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட் மற்றும் ஆடியோ ரிப்போர்ட் முழுமையாக வரவில்லை. வழக்கு தொய்வாக(Rithanya Case) போகிறது விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. தனி விசாரணை அதிகாரி வேண்டும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

ஊடகத்துறையினருக்கு நன்றி :

எனது மகளின் நகைகளை இன்னும் எங்களிடம் தரவில்லை. ஆதாரங்கள் திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவார்கள் ரிதன்யா வழக்கில்(Rithanya Case) இதுபோன்ற இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. பொதுமக்களுக்கும் இந்தக் கொடுமை போய் சேர்ந்ததற்கு, அதற்கான தைரியத்தை கொடுத்ததற்கு ஊடகத்திற்கு நன்றி.

தவறாக சித்தரிக்க வேண்டாம் :

பெண்ணை இழந்து விட்டு வருத்தத்தில் உள்ளேன். நான் பேச்சாளர் இல்லை என்னுடைய உணர்வுகளை பிரதிபலித்தேன், 27 வருடம் வளர்த்த என்னுடைய பெண்ணை சமூக வலைதளங்களில் நண்பர்கள் தவறாக சித்தரித்தது இழந்ததை விட மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் இப்படி ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால், வலைதளங்களில் பொய் தகவல்களை பரப்புவீர்களா? உண்மையை மட்டும் சொல்லுங்கள்” இவ்வாறு அண்ணாதுரை(Rithanya Father Annadurai) உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in