பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் மனிதவளத் துறை அரசுப் பணியாளர்களுக்கு முக அடையாள பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
கட்டாயாமான பயோமெட்ரிக் வருகை பதிவு
தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் ,சென்னை புனித தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 54 துறை செயலர்கள்,
பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.இவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தபட்டுள்ளது
உழியர்கள் இந்த புதிய பயன்பாட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்
இந்த பயோமெட்ரிக் மற்றும் முகம் காணும் தொடுதிரை இயந்திரம் அலுவலக முகப்பில் நிறுவப்பட்டுள்ளது ,இதில் துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறையை கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
வருகையை பதிவு செய்த உழியர்கள்
அதன்படி, காலை வழக்கம்போல் அலுவலகம் வருகை தந்த மனித வளத்துறை பணியாளர்கள் தங்களின் வருகையை புதிய நடைமுறையின்படி வருகை பதிவினை டிஜிடல் முறையிலான பயோமெட்ரிக் முறையிக் பதிவு செய்தனர்
விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை
இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமலான போது தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
==================