வழக்கம்போல் திமுக நாடகங்களை தொடங்கி விட்டது- அண்ணாமலை!

இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
BJP Ex Leader Annamalai About DMK Government Plan To Introduce Amendment Bill on Ban Hindi Language in Tamil Nadu
BJP Ex Leader Annamalai About DMK Government Plan To Introduce Amendment Bill on Ban Hindi Language in Tamil Nadu
1 min read

அண்ணாமலை அரசியல்

Annamalai About DMK Government on Hindi Imposition : தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்து பேசுவதில், முதன்மை வகிப்பவர் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்களையும், அவரின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வைத்து வருவார். அதன்படி, சில நாட்களுக்கு முன் வழக்கிறஞரை திருமா கட்சியை சேர்ந்தவர்கள் திருமா இருந்த கார் முன்பு தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது. இதற்கு அண்ணாமலை பிண்ணனியில் இருக்கிறார் என்று திருமாவளவன், குறிப்பிட்டது குறித்து இந்த வேலை என்னிடம் வைத்து கொள்ளாதீர்கள் நான் பெரிய ரவுடிகளை பார்த்து வந்துள்ளேன் என்று கண்டித்து பேசி உள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் பதிவு

இந்நிலையில், இந்தியை தமிழகத்தில் தடை செய்து மசோதா இயற்ற வேண்டும் என எழுந்த பிரச்சனை குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியை தடை செய்யும் மசோதா குறித்த தகவலை அறிந்து பொள்ளாச்சியில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை எரித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திமுக தொண்டர்கள் வழக்கம்போல, இந்தி எழுத்துக்களை எரிப்பதும், கருப்பு மை வைத்து அழிப்பதும் போன்ற வழக்கமான நாடகங்களை தொடங்கி விட்டதாக கூறினார். மேலும், இந்தியை தடை(Hindi Imposition Bill in Tamil Nadu) செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல, அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க : Annamalai : திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வரவேண்டும்- அண்ணாமலை!

பிளவுபடுத்தும் கூட்டணி

இதைத்தொடர்ந்து, இயல்பாகவே பிளவுபடுத்தும் இண்டி கூட்டணி(INDIA Alliance), ஊழலில் மட்டும் ஒன்றுபட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ள அண்ணாமலை பதிவிற்கு அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என அவரின் பதிவை ஷேர் செய்து, கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in