திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் : பதிவு வெளியிட்ட கட்சித் தலைவர்கள் !

DMK MLA Attack : கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கிய, திமுக எம்எல்ஏ மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
BJP Ex Leader Annamalai and Political Leaders Condemns DMK MLA Attack Reporter in Karur Quarry News in Tamil
BJP Ex Leader Annamalai and Political Leaders Condemns DMK MLA Attack Reporter in Karur Quarry News in TamilSource : Google
2 min read

செய்தியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ

Annamalai Condemns DMK MLA Attack Reporter in Karur : கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் பகு​தி​யில் விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​பட்ட கல்​கு​வாரி குறித்து செய்தி சேகரிக்​கச் சென்ற தனி​யார் செய்தி தொலைக்​காட்சி செய்​தி​யாளர், ஒளிப்​ப​தி​வாளர் மீது, எம்​எல்ஏ பழனி​யாண்டி மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் சரமாரி​யாகத் தாக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தன. மேலும், இது தொடர்​பான வீடியோ வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு கண்டனம்

இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது.

கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

இதைத்தொடர்ந்து, பாமக தலை​வர் அன்​புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனிம வளக் கொள்ளை நடப்​பதை அம்​பலப்​படுத்த முயன்ற செய்​தி​யாளர்​களை திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி தாக்​கியதற்​கான வீடியோ ஆதா​ரங்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

எனவே, பழனி​யாண்​டியை​யும், அவரது ஆதர​வாளர்​களை​யும் உடனடி​யாக கைது செய்ய வேண்​டும் எனவும் ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை.

கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்?

திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் அறிக்கை

இதைத்தொடர்ந்து தவெக தலை​வர் விஜய் ஊடக​விய​லா​ளர்​கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி நடத்​திய தாக்​குதல் கண்​டனத்​திற்​குரியது. அவர் மீது வழக்​குப் பதிவு செய்​து, உரிய நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

இப்​படிப்​பட்ட ஆட்​சியை மக்​கள், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தூக்கி எறியப் போவது உறு​தி. தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: ஊடக​விய​லா​ளர்​கள் மீது திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி தாக்​குதல் நடத்​தும் வீடியோ மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது. பழனி​யாண்டி உள்​ளிட்ட அனை​வரையும் உடனடி​யாக கைது செய்ய வேண்​டும்​.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in