

தேர்வு இறுதிப் பட்டியல் தாமதம்
Annamalai criticized DMK Government : தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த qண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்து விட்ட பிறகும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.
இளைஞர்கள் போராட்டம் கைது
இதைக்கண்டித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரசு அலட்சியம் - இளைஞர்கள் போராட்டம்
இதைக் கண்டித்து, தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் “கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படாமல் இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பணியிடங்களை குறைத்து துரோகம்
”கூட்டுறவுத் துறையில், மாநில அளவிலான தேர்வில், 327 பணியிடங்களிலிருந்து 267 ஆக குறைத்து துரோகம் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்காக, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையோடு தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக அரசு கண்டனம்
அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் திமுக அரசுக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் கைது - உடனே விடுதலை செய்க
மேலும் “இன்று நடைபெறும் அமைதியான அறப்போராட்டம், வெறும் கோரிக்கை மட்டுமல்ல, பல குடும்பங்களின் நியாயத்திற்கான குரல். தகுதியான இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.
கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
==================