”செந்தில் பாலாஜியின் பதற்றம்” : சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை

Annamalai on Karur: கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
Annamalai About Senthil Balaji on Karur Incident
Annamalai About Senthil Balaji on Karur Incident
2 min read

Annamalai About Senthil Balaji on Karur Incident : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன்(Aruna Jagatheesan) தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

என்டிஏ எம்பிக்கள் குழு ஆய்வு :

இந்தநிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai on Senthil Balaji) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.

கரூர் வழக்கு நாளை விசாரணை :

இந்த நிலையில் ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில்,விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர்(TVK Vijay in Karur) தெரிவித்துள்ளனர்.

வதந்தி என செந்தில் பாலாஜி கூற்று? :

விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

கருத்து திணிப்பை ஏற்படுத்த திட்டமா? :

கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி(Senthil Balaji on Karur Death) பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

முதலமைச்சர் வருகை, பின்னணி என்ன? :

யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.

மேலும் படிக்க : Karur : என்ன நடந்தது : அனைத்தையும் சேகரித்து உள்ளோம் - ஹேமமாலினி

செந்தில் பாலாஜி - பதட்டம் ஏன்? :

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in