
Annamalai on Contract Labour Minimum Wages : தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆனால், இவர்களின் கோரிக்கைகள் எதையும் திமுக அரசு இதுவரை நிறைவேற்றாமல் அலட்சியமாக நடந்து வருகிறது.
குடிநீர் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் :
இதுபற்றி அண்ணாமலை(Annamalai) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகம் முழுதும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி என, மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள்(Contract Labours). 20 ஆண்டுகளாக அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கு, ஒப்பந்தப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.
மேலும் படிக்க : கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் : திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேசம்
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் :
ஒரே ஒரு நாள் குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்(Contract Labour Protest) செய்தால், அதனால் பாதிக்கப்பட போவது, ஒட்டுமொத்த தமிழக மக்களே ஆவர். குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தங்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைத்து போராடி வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு, அவர்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பதே இல்லை. எனவே, தொழிலாளர்களின் நிறைவேற்றப்படும் வரை, திமுக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்” இவ்வாறு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(BJP Annamalai) தெரிவித்து இருக்கிறார்.
=====