மதுரை திமுக புள்ளியின் ”கமிஷன் அடாவடி” : அம்பலப்படுத்திய அண்ணாமலை

Annamalai on DMK Senthil Urea Bag Load Commission : ரயிலில் வந்திறங்கிய யூரியா மூட்டைகளை வைத்து கமிஷன் அடிக்க திமுக புள்ளி செய்த வேலையை, அண்ணாமலை அம்பலப்படுத்தி உள்ளார்.
Annamalai on DMK Senthil Urea Bag Load Commission Issue in Madurai
Annamalai on DMK Senthil Urea Bag Load Commission Issue in Madurai
1 min read

ஊழியர்களை தடுத்த திமுக நிர்வாகி :

Annamalai on DMK Senthil Urea Bag Load Commission : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது.. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில்(DMK Senthil) என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து இருக்கிறார்.

அதிக கமிஷனுக்காக அராஜகம் :

மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக(Load Man Coolie Issue), திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

தமிழக அரசு நாடகமாடுகிறது :

இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1,350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில்(Madurai Goods Shed) தேங்கிக் கிடக்கின்றன. லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று(Urea Issue in Tamil Nadu), மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க : ’256 அறிவிப்புகளை கைவிடும் திமுக’ : ஆதாரத்துடன் அண்ணாமலை கேள்வி

திமுகவால் விவசாயிகளுக்கே பாதிப்பு :

இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே. உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதல்வர் ஸ்டாலின், எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை(Annamalai on MK Stalin) கூறியுள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in