‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ : நூதன பிரச்சாரம், கையெலெடுத்த பாஜக

BJP Campaign Poster in Virudhunagar : ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் விருதுநகரில் பாஜக நூதன பிரச்சாரத்தை கையெலெடுத்து மக்களை ஈர்த்து வருகிறது.
BJP is attracting people with an innovative campaign in Virudhunagar, asking the question, "What has happened to our town?"
BJP is attracting people with an innovative campaign in Virudhunagar, asking the question, "What has happened to our town?"Google
1 min read

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

BJP is attracting people with an innovative campaign in Virudhunagar, asking the question, "What has happened to our town?" : தமிழக சட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் விறுவிறுப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நான்கு முனை போட்டிதான என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக, பிரசார பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறது. அந்தவகையில், விருதுநகரில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் விருதுநகரில் பாஜகவினர் நூதனமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

சுவரொட்டி மூலம் பிரசாரம்

சுவரொட்டிகளை ஒட்டி இந்த பிரச்சாரத்தை பாஜகவினர் செய்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற கேள்வியுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை

ஒவ்வொரு சுவரொட்டியிலும் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில், ‘சுகாதாரம் காற்றில் - வியாதிகள் வீட்டில், தூங்கும் அரசே விழித்தெழு, கண்ணீராக மாறிய குடிநீர் - தீராத தாகத்தில் விருதுநகர் மக்கள், ஆமை வேகத்தில் பாதாள சாக்கடைப் பணி

விருதுநகர் பிரச்னைகள்

அவதியில் விருதுநகர் மக்கள், வீதிக்கு வீதி மதுக்கடை - வீட்டுக்கு வீடு அச்சம், சாலைகளா மரணக்குழிகளா சீர்கெட்டு கிடக்கும் விருதுநகரின் உள்கட்டமைப்பு

இதுதான் விடியல் ஆட்சியா?

புத்தகம் சுமந்த கைகளில் கஞ்சாவா - இதுதான் திமுகவின் விடியல் ஆட்சியா, திமுக ஆட்சியின் அவலம் - கேள்விக்குறியில் பெண்கள் பாதுகாப்பு’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களை ஈர்க்கும் பாஜக

இந்த சுவரொட்டிகள் மக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. திமுக ஆட்சியின் அவலங்களை தோலுறித்து காட்டும் இத்தகைய சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய பாஜககவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in