”பணப்பெட்டி வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி” : தேமுதிகவை தாக்கும் நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran criticized DMK DMDK Alliance 2026 : திமுகவிடம் பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு தான் கூட்டணியில் சேருகிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
BJP Leader Nainar Nagendran criticized DMK DMDK Alliance 2026 taking money for kuttani in TN Assembly Election 2026
BJP Leader Nainar Nagendran criticized DMK DMDK Alliance 2026 taking money for kuttani in TN Assembly Election 2026Source : Google
2 min read

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

Nainar Nagendran criticized DMK DMDK Alliance 2026 : பிரதமர் மோடி வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து 11 ஆம் தேதி திருச்சிக்கும் செல்ல உள்ளார். இதனால் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வந்தடைந்த போது நயினார் நாகேந்திரன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரதமர் மோடி வருகை

பிரதமர் மோடி மார்ச் மாதம் 11 ஆம் தேதி திருச்சி வர உள்ளதால், அதற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும், இடம் தேர்வு செய்யப்பட்டதும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பதாக கூறினார்.

பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு கூட்டணி

திமுகவில் பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு தான் கூட்டணியில் சேருகிறார்கள் என்று கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர் யாரை சொல்கிறீர்கள் என கேட்டதற்கு ‘நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ‘ என்று கூறினார்.

தேமுதிக - திமுக கூட்டணி

சமீபத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக - திமுக கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், நயினார் மறைமுகமாக தேமுதிக- வைத்தான் கூறுகிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

90% வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் திமுக 90 சதவீத வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் திமுக தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்து கூறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை

மேலும் தமிழ்நாடு கஞ்சா மிகுந்த மாநிலமாக உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டு பேசினார்.

ஓ. பன்னீர்செல்வம் மீது நன்மதிப்பு

தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் குறித்து பேசிய அவர், அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பதாகவும், எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

200 இடங்களில் வெற்றி

நாங்கள் தான் 200 இடங்களில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

திமுக வலுவிழந்த கூட்டணி

ஆனால் திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது என்றும் அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மாநில அரசின் நிதி

மாநில அரசு தமிழக அரசுக்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை என்ற குற்றச்சாட்டை முதல்வர் முன்வைத்திருந்த நிலையில், 1000 கோடி ரூபாய் ஆண்டுதோறும் பேரிடருக்கான நிதியாக ஒதுக்கப்படுகிறது .

அதேபோல் கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் தமிழக அரசு, ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கும் நிதியை வேறு துறைக்கு பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in