அறிவாலயம் ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும்- நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Criticized DMK Government : திமுகவின் கேடுகெட்ட காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
BJP Leader Nainar Nagendran Criticized DMK Government on Rameswaram Girl Student Murder Incident News in Tamil
BJP Leader Nainar Nagendran Criticized DMK Government on Rameswaram Girl Student Murder Incident News in TamilGoogle
1 min read

இராமேஸ்ரம் மாணவி படுகொலை

Nainar Nagendran Criticized DMK Government : இராமேஸ்வரத்தில் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி, உயரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

தமிழகத்தில், கோவையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு தற்போது மாணவி கொலை என்பது பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு

இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது.

கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பதற்றத்துடன் தினமும் கழிகிறது

ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது.

இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கடிவாளம் இடும்

கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகி விட்டார்.

இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது! திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in