கோவை, மதுரைக்கு ’மெட்ரோ ரயில்’ வரும் : நயினார் நாகேந்திரன் உறுதி

Nainar Nagendran on Coimbatore Madurai Metro Rail Project : கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் வரும் என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu BJP leader Nainar Nagendran said, metro rail project definitely come to Coimbatore and Madurai
Tamil Nadu BJP leader Nainar Nagendran said, metro rail project definitely come to Coimbatore and MaduraiGoogle
1 min read

கொலைகளின் தலைநகரம் தமிழகம்

Nainar Nagendran on Coimbatore Madurai Metro Rail Project : நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ” தமிழகம் கொலைகளின் தலைநகரமாம மாறி வருவதாக குற்றம்சாட்டினார்.

காவல்துறைக்கு எதிராக மட்டும் 14 தாக்குதல்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் கலாச்சாரம் பரவலாகி வருகிறது.

இரண்டு நாளில் 4 கொலைகள்

கடந்த இரண்டு நாட்களில் நான்கு கொலைகள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60% உயர்ந்துள்ளன. பாலியல் குற்றங்கள் 53% அதிகரித்துள்ளன. தமிழகம் கொலைகளின் தலைநகரமாகிறது.

மெட்ரோ திட்ட அறிக்கையில் தவறு

கள்ளக்குறிச்சியில் 63 பேரும், கரூரில் 41 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை தமிழக அரசு தவறாக அளித்ததால், மத்திய அரசு DPR-ஐ திருப்பி அனுப்பியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கோவைக்கு மெட்ரோ வரக்கூடாது என்பதற்காக திட்ட அறிக்கையே மாறுபடுத்தப்பட்டது.

கோவையில் பேருந்து நிலையம் - ரயில் நிலையம் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 கி.மீ. ஆவது இருக்க வேண்டும். எதையும் சாதிக்க கூடியவர் பிரதமர் மோடி என்பதை திமுகவினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெல்லை மெட்ரோ எங்கே?

முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை ஏன் நினைவுகூரவில்லை? திட்டம் நிராகரிக்கப்படவில்லை.

கோவை, மதுரைக்கு மெட்ரோ வரும்

2026 ஜூன் மாதத்தில் கோவை, மதுரைக்கு மெட்ரோ வந்துவிடும். மின் கட்டணம் 300% உயர்த்தப்பட்டுள்ளது(Madurai Metro Rail Project). பேருந்தில் இலவச பயணம் தேவையில்லை. சதுர அடிக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறிய ஆட்சி அதை நிறைவேற்றவில்லை” இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in