BJP Leader Nainar Nagendran Slams DMK After Tribute Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 Celebration
BJP Leader Nainar Nagendran Slams DMK After Tribute Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 CelebrationGoogle

திமுகவின் ஆட்சி முடிய 140 நாட்கள் தான்- நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran in Rajaraja Cholan 1040th Birth Anniversary 2025 : ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழாவில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

ராஜராஜ சோழன் சதய விழா

Rajaraja Cholan Sathaya Vizha 2025 : தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்ர் ராஜராஜசோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு பா.ஜ. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அனைவரையும் மிஞ்சியவர் மாமன்னர் ராஜராஜசோழன். திறமையான ஆட்சி நடத்தினார். நமது பிரதமர் மோடி கங்கை கொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனின் 1000 வது ஆண்டு விழாவில் பங்கேற்று ராஜேந்திரசோழனின் புகழை உலகெங்கிலும் பரப்பினார்.

நெல் வீணாகி வருகிறது

தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை உள்ளே வைப்பது குறித்து பல தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிசீலனை செய்வோம். நெல் கொள்முதல் தாமதத்தால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், முளைத்து வீணாகி வருகிறது என்று தெரிவித்தார்.

முதல்வர் துணை முதல்வர் சினிமா பார்க்கின்றனர்

நெல் மூட்டைகளுடன் லாரிகள் பல நாட்கள் காத்திருக்கின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த அவர், இது எதையும் பற்றி கவலைப்படாமல் முதல்வர், துணை முதல்வர் சினிமா பார்த்து வருகின்றனர் என்று விமர்சித்தார்.

திமுக அரசு எதையும் செய்யவில்லை

இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர் என்றும் இதுவரை சொன்னதை எதையும் திமுக அரசு செய்யவில்லை. திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன. கவுண்டவுன் தொடங்கி விட்டது என்று கூறினார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in