
அரசு மகப்பேறு மருத்துவமனை :
BJP Nainar Nagendran on DMK Govt : கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். இந்த அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுமை பற்றி விமர்சனங்களை எழுந்திருக்கும் நிலையில், திமுக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
திமுக அரசுக்கு பாஜக கேள்வி :
இதுகுறித்து, அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் காட்சிகள் மிகுந்த கவலையளிக்கிறது.
மேலும் படிக்க : 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
இதுதான் சிறந்த கட்டமைப்பா? :
பச்சிளம் குழந்தைகளைப் படுக்க வைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
இத்தகைய அவல நிலையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.