தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் : நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran on DMK : நெல்கொள்முதல் நிலையங்களை நேரடியாக பார்வையிட்ட நயினார் நாகேந்திரன், டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
BJP Leader Nainar Nagendran Visit Paddy procurement centers in Thanjavur Slams DMK Government
BJP Leader Nainar Nagendran Visit Paddy procurement centers in Thanjavur Slams DMK GovernmentImage Courtesy : Nainar Nagendran X Page
1 min read

தலைவர்கள் எதிர்ப்பு

Nainar Nagendran on DMK : நெல்கொள்முதல் விரயத்தில் அரசியல் மோசடிகள் அதிகம் உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பெரியார், கருணாநிதி பெயரை பயன்படுத்து ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று விமர்சித்ததோடு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி சென்று ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி தான் இதற்கு காரணம். தமிழ்நாட்டிற்கு தினசரி ஆயிரம் லாரிகளில் கோடிக்கணக்கான கனிம வளங்கள் திருடப்படுகின்றன. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து தனது விமர்சனம் மற்றும் கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

தஞ்சாவூரில் நயினார் நாகேந்திரன்

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர், அங்கு இருந்த விவசாயிகளிடம் நெல் பாதிப்புகள் உள்ளிட்ட நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை. தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக அரசின் அலட்சியங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in