

அதிக இடங்களை கோரிய பாஜக
BJP strategizing to enter the TN Assembly with double digits, is contesting lotus symbol in 32 seats, including TMC : அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக சட்டமன்ற தேர்தலை உத்வேகத்துடன் சந்திக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் அந்தக் கட்சி 50 இடங்களுக்கு மேல் போட்டியிட விரும்பியது.
கவனத்துடன் செயல்பட்ட எடப்பாடி
ஆனால், கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக போன்ற கட்சிகள் இருந்ததால், இடங்களைப் பகிர்ந்தளிப்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார்.
டெல்லி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாஜகவிற்கு நேரடியாக 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பாஜகவிற்கு கூடுதல் தொகுதிகள்
2021 தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜகவிற்கு, இம்முறை 7 இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது அக்கட்சியின் வளர்ச்சிக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
தாமரை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ்
அதிமுக கூட்டணியில் இடம் வகிக்கும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சிக்கு 5 தொகுதிகள் (கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், ராணிப்பேட்டை) ஒதுக்கப்பட்டன
இது ஒரு முக்கிய அரசியல் திருப்ப்மாக பார்க்கப்படுகிறது. சைக்கிள் சின்னம் பிரச்னையில் இருப்பதால், 5 இடங்களிலும் தமாகா வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என ஜி.கே.வாசன் அறிவித்தார்.
இதன் மூலம் பாஜகவின் 27 + தமாகாவின் 5 எனத் தாமரை சின்னம் என பாஜகவின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
பின்னணி கணக்கு
தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் பாஜகவின் அடிப்படை வாக்குகளைத் தமாகா வேட்பாளர்கள் எளிதாகப் பெற முடியும். வாசனுக்கு செல்வாக்குள்ள பகுதியில் பாஜகவிற்கும் கூடுதர் வாக்குகள் கிடைக்கும்.
இரட்டை இலக்கத்தில் தாமரை வெற்றி!
சட்டமன்றத்திற்குள் தாமரைச் சின்னத்தில் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு வர வேண்டும் என்பது டெல்லி தலைமையின் கட்டளை. இதற்கு 32 தொகுதிகள் என்பது வலுவான அஸ்திவாரமாக பார்க்கப்படுகிறது.
பலமான கட்சியாக மாறத் துடிக்கும் பாஜக
ஒரே சின்னத்தின் கீழ் (தாமரை) அதிக வேட்பாளர்கள் நிற்பது, திமுக மற்றும் விஜயின் தவெக போன்ற கட்சிகளுக்கு சவாலாக இருக்கும்.
கடந்த முறை 4 எம்எல்ஏக்களை கொண்டிருந்த பாஜக, இம்முறை எப்படியாவது 15 முதல் 20 இடங்களை வென்று சட்டமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அதற்கேற்ப வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே தமாகாவிடம் இருந்து தாமரை சின்னத்திற்காக பெற்றுள்ளது.
வாக்கு சதவீதம் உயரும்
32 இடங்களில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதால், பாஜகவின் ஒட்டுமொத்த மாநில வாக்கு சதவீதம் கணிசமாக உயரும்.
இது வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜகவை ஒரு பிரதான கட்சியாக நிலைநிறுத்த உதவும்.
=======