வைகோ மீண்டும் எம்பி.யாகலாம்! : அழைப்பு விடுத்த ராம்தாஸ் அத்வாலே

Minister Athawale Ramdas Bandu Calls Vaiko To Join BJP : வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்பியாகலாம் என்று, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே யோசனை தெரிவித்து இருக்கிறார்.
BJP Minister Athawale Ramdas Bandu Calls Vaiko To Join BJP For MP Seats
BJP Minister Athawale Ramdas Bandu Calls Vaiko To Join BJP For MP Seats
1 min read

விடைபெற்றார் வைகோ :

Minister Athawale Ramdas Bandu Calls Vaiko To Join BJP : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் எம்பி பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலங்களவையில் பேசிய அவர், 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். இனி எம்பியாக முடியாது என்பது வேதனை தருவதாகவும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். இளம் எம்பிக்களுக்கும் அவர் அறிவுரை கூறினார்.

வைகோவிற்கு ராம்தாஸ் அத்வாலே பாராட்டு :

வைகோவை வாழ்த்தி பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “வைகோ ஒரு சிக்கலான அரசியல் வரலாற்றுடன் கூடிய முக்கியமான தலைவர். அவர் பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு மக்களுக்காகவும், நாடாளுமன்றத்திலும் பல்வேறு பிரச்சனைகளை உறுதி மற்றும் வாக்குவாதங்களுடன் எடுத்துச் சொன்னவர்.

பாஜக கூட்டணிக்கு வாங்க வைகோ :

அவரின் ராஜ்யசபா பதவி முடிந்துள்ள நிலையில், அவர் எதிர்காலத்தில் எம்பி பதவியை தொடர விரும்பினால், பாஜக கூட்டணியில்(BJP MDMK Alliance) சேர்ந்தாலே அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்தால் அது அனைவருக்கும் நல்லது. பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு தேசிய அளவில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். வைகோவுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்பு வழங்கப்படும்” என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

தமிழக அரசியலில் சலசலப்பு :

ராம்தாஸ் அத்வாலேயின் இந்த அழைப்பு(Athawale Ramdas Bandu Calls Vaiko), தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதிமுகவில் மல்லை சத்யா பிரச்சினை கிளம்பிய போதே, மத்திய அமைச்சராக துரை வைகோ விரும்புவதாக, பரவலாக பேச்சுகள் எழுந்தன. இதனால், வைகோ பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டது. மதிமுகவின் அங்கீகாரத்திற்கு கூடுதல் எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, திமுக கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே வைகோ கட்சியால் 8 இடங்களை பெற முடியும். இத்தகைய சூழலில் அத்வாலேயின் அழைப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

வைகோவின் எதிர்கால திட்டம் என்ன? :

எதிர்கால அரசியல் பயணம் பற்றி வைகோ இதுவரை அதிகாரப் பூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது துணிவும் தெளிவும் மிகுந்த அரசியல் பேச்சுகள் நாடாளுமன்றத்தில் தொடர்வது தமிழகத்திற்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. இனி வைகோ(Vaiko Rajya Sabha MP) எடுக்கும் முடிவினை பொருத்தே, அவரது அரசியல் எதிர்காலம், மதிமுகவின் அரசியல் பயணம் அமையும்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in