முரசு புயலின் போது கடலில் மாயமான 9 தமிழக மீனவர்கள் : ஆந்திர கடற்கரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி மாயமான நிலையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Cyclone Murasu: Four Bodies Wash Ashore in Andhra Pradesh, Nine Tamil Nadu Fishermen Missing
Cyclone Murasu: Four Bodies Wash Ashore in Andhra Pradesh, Nine Tamil Nadu Fishermen MissingGoogle
1 min read

ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்கள் :

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டம் கொத்தப்பட்டினம் கடற்கரையில், முரசு புயலின் தாக்கத்தால் கடலில் இருந்து ஒரு மீன்பிடிப் படகு கரை ஒதுங்கியுள்ளது.

அந்தப் படகைப் பார்வையிட்ட உள்ளூர் மீனவர்கள், அதில் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அப்பகுதியில் நான்கு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.

அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 9 பேர் :

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

அவர்களில் 8 பேர் காசிமேட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கடலூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி கோரிய மீனவர்கள். துண்டிக்கப்பட்ட தொடர்பு :

நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை, மாயமான படகில் இருந்த மீனவர்கள் அருகிலிருந்த மற்றொரு படகில் உள்ளவர்களை தொடர்புகொண்டு, படகின் என்ஜின் அறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மற்றொரு படகும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு உதவ முடியவில்லை.

அதன்பிறகு மாயமான படகில் இருந்த மீனவர்களுடன் தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

9 பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. போலீசார் விசாரணை :

முரசு புயலில் சிக்கி மாயமான 9 தமிழக மீனவர்களின் உடல்களும் ஆந்திரக் கடற்கரையில் கரை ஒதுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கரை ஒதுங்கிய உடல்களை போலீசார் கைப்பற்றி, அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த மீனவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

====================