பட்ஜெட் 2026-27 , விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய பாமக தலைவர் சௌமியா அன்புமணி , இந்த 2026-27 வேளாண் பட்ஜெட்டானது விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளிப்பதாகவும் ,
விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது வருத்தமளிப்பதாக சட்டபேரைவையில் தெரிவித்தார்
பட்ஜெட் விவாசாயிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு , சௌமியா அன்புமணிஆதங்கம்
இந்த தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் , விவசாயிகளுக்களின் நலனுக்காக குறைந்த அளவிலான நிதியெ ஒதுக்கப்பட்டுள்ளது ,
அது பெரிய ஏமாற்றம் என்றும் நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்
நீர்பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி இருக்கலாம் , பாமக தலைவர்
கால்நடை, பால்வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற வேளாண்துறை சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் மிகமிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,
வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பி , நீர் பாசன திட்டங்களுக்கு இன்னும் அதிகமான கூடுதக்ல் நிதியை ஒதுக்கியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்
குறிப்பாக ,ஒவ்வொரு 10 கி.மீ தொலைவிற்கும் தடுப்பணைகளைக் கட்டினால், கேரளா மற்றும் கர்நாடகாவிடம் நீரை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று குறிப்பிட்டு பேசினார்
ஏரி , குளங்களை தூர்வாரும் திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை ;சௌமியா அன்புமணி
தொடர்ந்து பேசிய பாமக தலைவர்சௌமியா அன்புமணி ,ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
குறிப்பாக நிலத்தடி நீர்மட்டத்தையே விவசாயிகளில் வாழ்வாதாரம் குறித்து எந்த விதமான அறிவிப்பு இல்லை ,
தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீரை சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
=========================