தவெகவின் முதல் பட்ஜெட்
தவெக ஆட்சி அமைத்த பிறகு தமிழக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது , நிதியமைச்சர் மரிய வில்சன் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்,
இந்த நிலையில் நாளை வேளாண் அறிவிப்புகள் குறித்த பட்ஜெட் அறிவிப்புகள் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது
பட்ஜெட் 2026; அரசியல் தலைவர்கள் கண்டனம்
நடந்து முடிந்த தசெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான அறிவிப்புகளுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்வித்துள்ளனர்,
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜய்காந்த்
தவெக அரசின் இந்த பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த அறிவிப்புகள்ஏதும் இடம்பெறவில்லை என்றும் ,பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.புதிய தொழிற்சாலைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை எனவும், ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து மட்டுமே அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்
பாமகவின் சௌமியா அன்புமணி கூறியதாவது
தவெக அரசின் முதல் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் பாமக சௌமியா அன்புமணிகூறும்போது
இன்றைய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறன அறிவிப்பு ஒன்று இல்லை என்றும் , பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி - குண்டாறு இணைப்புக்கு தேவை ரூ. 2,500 கோடி, ஒதுக்கீடு ரூ.150 கோடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி-காவிரி குடிநர் திட்டம் என்ன ஆனது? என்று தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
எதிர்கட்சி தலைவர் உதயநிதி, எடப்பாடி விமர்சனம்
பட்ஜெட் அறிவிப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது , திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவெக அரசு வெட்டி ஒட்டியுள்ளதாகவும் , எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தவெக வெற்றி என்ற சொல்லை சேர்த்து பெயரை மாற்றம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி கூறும்போது
தவெக அரசின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களாகியும் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. வெறும் வசனங்களை பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சியில் ரீல்ஸ், மீம்ஸே சாதனையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் தவெக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாயிற்று என்று கேள்விஎழுப்பியுள்ளனர்
=======================