"தவெக வெற்றிமுகம், 109 ஆக உயரும் எண்ணிக்கை” : துணை நின்ற விசிக, வழிவிட்ட பாமக : திமுக 2ம் இடம், அதிமுக 3ம் இடம்.!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி முகத்தில் பயணித்து வர, திமுக 2வது இடத்திலும், அதிமுக 3வது இடத்திலும் உள்ளன.
by-elections Maduranthakam and Dharapuram constituencies, TVK is heading towards victory
by-elections Maduranthakam and Dharapuram constituencies, TVK is heading towards victorysource:thamizhalai,ai generated
1 min read

மதுராந்தகம் - தவெக முன்னிலை

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருக்கிறார். சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருப்பதற்கு, பாமக மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

திமுகவிற்கு 2வது இடம்

திமுக வேட்பாளர் பரந்தாமன் சுமார் 20 ஆயிரம் வாக்குகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக அடைந்துள்ள எழுச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.

3வது இடத்தில் அதிமுக

சட்டசபைத் தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவின் வாக்குகளை தவெக கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

கைகொடுத்த விசிக, பாமக

திமுகவின் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளையும் தவெக எடுத்திருக்கிறது. அதற்கு திமுக கூட்டணியில் இருந்த விசிக, தற்போது தவெக பக்கம் நகர்ந்ததே முக்கிய காரணம்.

அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று கையை தூக்கிவிட்டது. இதனால் பாமக ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தவெக தொடக்கம் முதலே மதுராந்தகம் தொகுதியில் முன்னிலையை தக்க வைத்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு சுமார் 9% வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் தவெக பக்கம் சென்றுள்ளது.

இதனால் தவெகவின் வெற்றிக்கு பாமக மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆதரவாக இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.

தாராபுரம் முன்னணி நிலவரம்

தாராபுரம் தொகுதியில் முதலில் முன்னிலையில் இருந்த அதிமுக பின்னர் 2வது இடத்திற்கு வந்து இப்போது 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

விசிக, காங்கிரஸ் வாக்குகள் தவெகவிற்கு கைகொடுக்க, பாமக ஒதுங்கியதால், அதன் வாக்குகளும் தவெகவிற்கு கிடைத்து இருக்கும் எனத் தெரிகிறது.

சரிந்தது அதிமுகவின் கோட்டை

எனவே, கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்பட்டு இருக்கிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

===

logo
Thamizh Alai
www.thamizhalai.in