”TVKவில் இ. கம்யூனிஸ்ட் சி. மகேந்திரன்” : சாதியை ஒழித்த தவெக, சிவப்பு துண்டுடன் பயணம் : முதல்வர் விஜய்க்கு பாராட்டு...!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தவெகவில் இணைந்துள்ளார்.
C. Mahendran, a senior leader of the Communist Party of India (CPI), has joined TVK
C. Mahendran, a senior leader of the Communist Party of India (CPI), has joined TVKgoogle
2 min read

இந்திய கம்யூனிஸ்ட் - மகேந்திரன்

தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் சி. மகேந்திரன். 18 வயதில் இயக்கத்தில் இணைந்த அவர், பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக சி மகேந்திரன் பதவி வகித்து வந்தார்.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்

2015ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சி. மகேந்திரன், டெபாசிட் இழந்தார்.

தவெகவிற்கு சிபிஐ ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலில் தவெகவிற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தந்தன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெளியில் இருந்து முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றன.

தவெகவில் சி.மகேந்திரன்

இந்தநிலையில், சி. மகேந்திரன் தவெகவில் இணைந்து தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.

தவெகவில் இணைந்தது ஏன்?

தவெகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார் சி. மகேந்திரன்.

சாதி தோற்கடிக்கப்பட்ட அரசியல்

முதன்முறையாக சாதி தோற்கடிக்கப்பட்டதை அரசியலில் வியந்து பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவெகவின் தேர்தல் வெற்றி ஒழித்து இருக்கிறது.

சிவப்பு துண்டோடு பயணிப்பேன்

சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி, சாதியை ஒழித்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்க கூடிய பல சிறைச்சாலைகளில் போராட்டங்களுக்காக இருந்துள்ளேன்.

18 வயதில் கம்யூனிஸ்ட் இயக்கம்

18 வயதில் இருந்து இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். சிவப்பு துண்டை எடுக்காமல் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சினை என்னவென்றால் ஊழல் ஒழிப்புதான்.

ஊழல் ஒழிப்பு - விஜய் மீது நம்பிக்கை

ஆனால், ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளார். அதனால்தான் தவெகவில் இணைந்தேன். சமூகம் என்பது ஆதிக்ககாரர்களுக்கான வசதியை மட்டுமே செய்து கொடுக்கிறது.

என்னதான், அரசியல் பேசினாலும் சரி.. ஒடுக்கப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்தின் பணம், அரசாங்கத்தின் உணர்வுகள் போய் சேருவதில்லை.

தவெகவால் எதுவும் சாத்தியமாகும்

அதை கொண்டு போய் கொடுபப்தற்கான சாத்தியத்தை இந்த தேர்தல் விஜய் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டின் வெற்றி மட்டுமல்ல.. இந்தியாவின் வெற்றியாகும் பார்க்கிறேன்..

ஏழையும் சட்டமன்றம் செல்லலாம்

நான் ரொம்ப வியந்து பார்த்த விஷயம் என்னவென்றால் இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது. மதத்தை ஒழித்து இருக்கிறது.

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளை போக்கி இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை விஜய் உருவாக்கியிருக்கிறார்.

பணம் இல்லாதவனும் வெல்லலாம்

இந்த தேர்தல் பணம் இல்லாதவன், காசு இல்லாதவன் தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்பதை காட்டியிருக்கிறது. இதை ஜனநாயகத்தின் புரட்சியாக நான் பார்க்கிறேன்..

எளிய மக்களுக்கான பெரிய இயக்கம் இது கட்சிகளை கடந்து, வேறுபாடுகள், மாறுபாடுகளை கடந்து, எளிய மக்களுக்கான பெரிய இயக்கமாக வளரவேண்டும்.

தவெக விதை போட்டிருக்கிறது

அதற்கான விதை போடப்பட்டு இருக்கிறது. எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற முறையில்தான் நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன்” என்று சி. மகேந்திரன் நீண்ட விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in