பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை எடப்பாடிக்கும் -அமைச்சர் சிவசங்கர் பதிலடி

SS Sivasankar on Edappadi Palanisamy : தேர்தல் பரப்புரையின் போது திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்த எடப்பாடிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காட்டம் தெரிவித்துள்ளார்.
Calling DMK a slave alliance is unnecessary criticism, Minister Sivasankar responds to Edappadi Palaniswami's speech
Calling DMK a slave alliance is unnecessary criticism, Minister Sivasankar responds to Edappadi Palaniswami's speechgoogle
1 min read

இதுகுறித்து பேசிய அமைச்சர்

SS Sivasankar on Edappadi Palanisamy : எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனக்கிருக்கும் சிக்கல்களை மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் திமுக மீது தவறான விமர்சனங்களை குற்றசாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார் , இன்றைக்கு ஒவ்வொரு முடிவையும் டெல்லிக்கு பறந்து சென்று எடுத்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அப்படிப்பட்டவர் திமுக கூட்டணியையும், அரசையும், முதல்வரையும் தேவையில்லாமல் விமர்சித்து வருவது தேவையற்றது என தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது தேவையற்றது

நல் முறையில் இருக்கும் எங்களையும் எங்களின் கூட்டணி கட்சிகளையும் தேவையில்லாமல் விமர்சித்து வருவது தேவையற்றது என குறிப்பிட்டிருக்கும் அவர் ,இந்தமுறை கூட்டணிக் கட்சிகள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடவும் வழிவகுத்துள்ளார்.

பாஜக, தமாகா மட்டுமல்லாது ஜான்பாண்டியனின் கட்சி, புதிய நீதிக் கட்சியும் கூட தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலை இருக்கும் நிலையில். தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தாமரைக்கு பழனிசாமி மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார் என் விமர்சித்தார்

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடிக்கும்

பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிராவில் சிவ சேனா, சரத் பவார் கட்சிகள், கோவாவில் மாநிலக் கட்சிகள் சந்தித்த நிலைதான் பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் ஏற்படப்போகிறது ,எடப்பாடியின் பேச்சுக்கு பதில் சாடினார்

அமித் ஷாவின் பின்னால் இருக்கும் அதிமுக

இதுக்கு குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் அமித் ஷா தான் இருக்கிறார் என்பது கிராமங்கள் வரைக்கும் தெரியும்.

அமித் ஷா கொடுக்கும் ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிடாமல் அப்படியே பழனிசாமி வாசிக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ,திமுக மீதான குற்றசாட்டை விமர்சனம் செய்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in