ஜெயலலிதா பிறந்தநாளில் வேட்பாளர் பட்டியல் : எடப்பாடி வியூகம்!

சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
Candidate list for Jayalalithaa's birthday - Edappadi confirmed!
Candidate list for Jayalalithaa's birthday - Edappadi confirmed!google
2 min read

அதிமுகவில் கூட்டணி நிலமை

aiadmk candidate list தமிழக அரசியலில் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க., என நான்கு முனை போட்டிகள் உள்ளன.

அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புதியபாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதாதளம் செக்யூலர் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக?

தே.மு.தி.க.,வும், புதிய தமிழகமும் இணைய வாய்ப்புள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தோல்வியடைந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு

2021 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., த.மா.கா., கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அ.தி.மு.க., 179 தொகுதிகளிலும், பா.ஜ., 20, பா.ம.க., 23, த.மா.கா., 6 தொகுதிகளிலும் போட்டியிட்டு 39.71 சதவீதம் ஓட்டுகளை பெற்றன.

அதே கட்சிகள் இத்தேர்தலிலும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் வரவாய்ப்புள்ளதால் அ.தி.மு.க., ஏற்கனவே வெற்றி பெற்ற, குறைந்த ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த 164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கட்சிகளை பலப்படுத்தும் அதிமுக

எம்.ஜி.ஆர்., பிறந்தநாளான ஜன.,17ல் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்ட நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.,24ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்ட 179 தொகுதிகளில் 33.29 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.

இத்தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என பழனிசாமி நம்பிக்கையுடன், தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளை இணைத்து பலப்படுத்தியுள்ளார்.

கூட்டணிக்கு எவ்வளவு 'சீட்' பா.ஜ.,வுக்கு 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்துள்ளது. அ.ம.மு.க.,வுக்கு 8, பா.ஜ., 'கோட்டாவில்' இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சிக்கு தலா 2, புதிய பாரதம் கட்சிக்கு ஒன்று வழங்கப்படும்.

பாஜ கோட்டாவில் சீட்

த.மா.கா.,வுக்கு 5, பா.ம.க.,வுக்கு 10, தே.மு.தி.க., சேரும் பட்சத்தில் 8, புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க., முடிவுசெய்துள்ளது. பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சிறு கட்சிகள் இணையும் பட்சத்தில் அக்கட்சிகளுக்கு பா.ஜ., கோட்டாவில் 'சீட்' ஒதுக்க வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளில் வேட்பாளர் பட்டியல்

பிப்.24 அஷ்டமி திதி ஜெயலலிதா இருக்கும்போது நல்லநாள், நேரம் பார்த்துதான் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார். அதுபோல் பழனிசாமியும் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24 அஷ்டமி திதி என்பதால் அன்று வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்நாளில் செய்யும் காரியத்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும், செய்வினை பாதிப்புகள் விலகும், செல்வசெழிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது,

இதனால் அவர் அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளதை தாண்டி, அன்று ஜெயலலிதா அம்மா பிறந்தநாள் என்பதால் மேலும் அந்நாளில் வெளியிடுவது, சிறப்பான ஒன்றாகும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in