காவிரி நீர்ப் பேச்சுவார்த்தை: முதல்வர் விஜய்யுடன் பெங்களூர் செல்லப்போவது யார் யார் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய் பெங்களூரு செல்லவுள்ள நிலையில், அவருடன் செல்லும் உயர் மட்டக் குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
Do you know who will be accompanying Chief Minister Vijay to Bengaluru?
Do you know who will be accompanying Chief Minister Vijay to Bengaluru?google
1 min read

Cauvery water issue : Do you know who will be accompanying Chief Minister Vijay to Bengaluru?

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்கள் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) பெங்களூரு செல்லவுள்ள நிலையில், அவருடன் செல்லும் உயர் மட்டக் குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேக்கேதாட்டு விவகாரமும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவமும்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குத் தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இரு மாநிலங்களுக்கும் பெரும் நிம்மதி?

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், இரு மாநில முதல்வர்களும் நேரடியாகப் பேசிச் சுமுக முடிவு எட்டினால் அது இரு மாநில மக்களுக்குமே பெரும் நிம்மதியைத் தரும் எனக் கருதப்படுகிறது.

முதல்வருடன் கர்நாடகம் செல்லும் குழுவினர்

இந்நிலையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள்ளாகப் பெங்களூரு சென்றடையும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் பின்வருவோர் இடம்பெறுகின்றனர்:

அமைச்சர்கள்: என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா.

அரசின் உயர் அதிகாரிகள்: தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறைச் செயலாளர் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்.

சட்ட வல்லுநர்: தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் உமாபதி.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நூதனப் போராட்டம்..!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in