கரூரில் விசாரணையை தொடங்கிய CBI: ஆவணங்களை ஒப்படைத்த SIT

CBI Investigation on Karur Stampede Death Case Update : கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.
CBI Investigation Begins on Karur Stampede Death Case Update in Tamil
CBI Investigation Begins on Karur Stampede Death Case Update in Tamil
1 min read

கரூர் துயரச் சம்பவம்

CBI Investigation on Karur Stampede Death Case Update : கரூரில் செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது.

கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணை

இதனிடையே, சிறப்பு விசாரணைக்கு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் நாடியது. இதையடுத்து, ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு சிபிஐ விசாரணையை கண்காணிக்கும்.

கரூரில் சிபிஐ விசாரணை குழு

இந்தநிலையில், கரூர் வந்துள்ள மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர் அதிகாரிகள் குழு, விசாரணையை தொடங்கி இருக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), இதுவரை சேகரித்த தகவல்கள், கோப்புகள் மற்றும் சாட்சிகளை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கிறது.

மேலும் படிக்க : 41 பேர் இறப்பு, தமிழக அரசு தான் காரணம் : நயினார் நாகேந்திரன்!

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார்

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் 5 மூத்த அதிகாரிகள், கரூரில் தங்கி விசாரணையை மேற்கொள்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடம், மருத்துவமனை, உயிரிழந்தோர் குடும்பத்தினர், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள், காவல்துறை கூட்டத்திற்கு வழங்கிய பாதுகாப்பு, நெரிசலுக்கான காரணங்கள் குறித்து இவர்கள் விரிவாக விசாரணை நடத்த இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் விரைவில் கரூர் வந்து பார்வையிடுவார் எனத் தெரிகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in