தமிழகத்தில் ”மே முதல் மின்பற்றாக்குறை” : மத்திய அரசு எச்சரிக்கை! : கொள்முதலை அதிகரிக்க யோசனை...

தமிழகத்தில் மே முதல் மின் பற்றாக்குறை ஏற்படலாம் என்று, மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது.
central government has warned that there could be a power shortage in Tamil Nadu from May
central government has warned that there could be a power shortage in Tamil Nadu from May
1 min read

தென் மாநிலங்கள் - மின் நுகர்வு :

central government has warned that there could be a power shortage in Tamil Nadu from May : தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன், நடப்பாண்டு மார்ச் மாத மின்பயன்பாட்டை, மின்தேவை விவரங்களை மத்திய மின்துறை ஒப்பிட்டு உள்ளது.

மின்தேவை அதிகரிப்பு

அதன்படி தென்மாநிலங்களின் தினசரி மின்தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்-ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்-ஆக மின்தேவை கணிசமாக அதிகரித்து உள்ளது.

புதுவையை பொறுத்த வரை 483 மெகாவாட்டிலிருந்து, 476 மெகாவாட்-ஆக மின்தேவை குறைந்து உள்ளது. மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மே முதல் மின்பற்றாக்குறை

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொள்முதலை அதிகரிக்க யோசனை

மின்தேவையை முன்கூட்டியே மதிப்பீடு செய்து மின்பற்றாக்குறையை சமாளிக்க தேவைப்படும் அளவு மின்கொள்முதல் நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினசரி தேவை அதிகரிப்பு

தென்னிந்தியாவில் கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியிருப்பதாலும், தொழில்துறை வளர்ச்சியாலும், குளிர் சாதனங்களை பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாலும், தினசரி மின்சாரத் தேவை கணிசமான உயர்வைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாகத் தமிழ்நாடு, தினசரி மின் நுகர்வு மற்றும் தேவையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தின் மின்தேவை அதிகரிப்பு

குடியிருப்பு மற்றும் வணிக துறைகளில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு மட்டும் ஆண்டுதோறும் 5 முதல் 8 லட்சம் புதிய மின் நுகர்வோரை புதிதாக சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் 89% அதிகரிக்கும்

தமிழ்நாட்டின் மொத்த ஆற்றல் தேவை, அடுத்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 89% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026-27 ஆம் ஆண்டில் சுமார் 1.48 லட்சம் MU-லிருந்து, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 2.80 லட்சம் MU-ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in