”வேலூர் விமான நிலையம்” : 6 மாதங்களில் செயல்பாட்டிற்கு வரும், பணிகள் தீவிரம் : நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு...!

வேலூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, 6 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
Central Government intensified efforts to establish airport in Vellore  ordered twork  completed within six months
Central Government intensified efforts to establish airport in Vellore ordered twork completed within six monthsAI generated
2 min read

தமிழகத்தில் 5 விமான நிலையங்கள்

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி என 6 முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. 6வதாக விமான நிலையம் வரப்போகும் நகரமாக மாறுகிறது வேலூர்.

வேலூர் விமான நிலையம்

98 ஏக்கர் பரப்பளவில் உருமாறிக் கொண்டிருக்கும் ஏர்போர்ட் விமானத்தில், "எப்போது தான் விமானம் பறக்கும்?" என்ற வேலூர் மக்களின் நீண்டநாளை கனவு விரைவில் நனவாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி மேம்படும்

ஒருபகுதியில் அமையும் விமான நிலையம் என்பது, வெறும் போக்குவரத்துக்காக மட்டுமன்றி, அப்பகுதியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும். ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பையே மாற்றியமைக்கும்.

உடான் திட்டம்

முக்கிய நகரங்களுக்கும் விமான வசதியை கொண்டு வருவதே, மத்திய அரசின் உடான் திட்டம். 2017ம் ஆண்டிலிருந்து வேலூர் விமான நிலைய பணிகள் மீண்டும் உயிர்பெற்றன.

65 கோடியில் பணிகள்

சுமார் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டன. இப்போது ஓடுபாதை மற்றும் முனைய கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.

விரைவில் விமான நிலையம் திறப்பு?

எனவே, விமான நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். அண்மையில் வேலூர் வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விமான நிலையத்திற்கான சீரமைப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

எனவே, வேலூர் விமான நிலையம் மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்" என்று உறுதி தந்திருந்தார்.

தேமுதிக எம்பி சுதீஷ் கோரிக்கை

தேமுதிக எம்பியான எல்கே சுதீஷூம் இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார். விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, வேலூர் விமான நிலையத்தை உடனடியாக இயக்கக் கோரி மனு அளித்தார்.

பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு

மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர், உடனடியாக வேலூர் விமான நிலையத்தின் தற்போதைய கள நிலவரம் குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்தார்.

6 மாதங்களில் விமான நிலையம் திறப்பு

6 மாதங்களுக்குள் வேலூர் விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்" என்ற உறுதிமொழியையும் வழங்கினார்.

வேலைவாய்ப்பு பெருகும்

வேலூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், சர்வதேச வர்த்தகர்களின் நேரடி வருகை அதிகரிக்கும். புதிய தொழில் முதலீடுகளும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாகும்.

கல்வி, ஆன்மிகம் வளர்ச்சி

வி.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் சர்வதேச மாணவர்கள், வேலூர் பொற்கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்லும் ஆன்மிக பயணிகள் என அனைவருக்கும் இந்த வேலூர் விமான நிலையம் ஒரு மிகச் சிறந்த போக்குவரத்து இணைப்பாக அமையும்

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in