சென்னைக்கு காத்திருக்கு பெருமழை பேராபத்து
இந்த ஆண்டு சென்னைக்கு இயல்பை விட பெருமழை பெய்யகூடும் என்ற அறிக்கை வெளியாகி உள்ளது
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ காலநிலை சூழல், தற்போதைய தென்மேற்குப் பருவமழை, தொடர்ந்து வரும் வடகிழக்குப் பருவமழை மற்றும் 2027ம் ஆண்டின் குளிர்காலம் வரையிலும் நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது
எல்நினோ எவ்வாறு கணிக்கப்படுகிறது ?
பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 28 செல்சியஸ் டிகிரியாக இருக்கும். இந்த வெப்ப நிலையில் இருந்து 0.5 கூடினால் அது எல் நினோ உருவானதாக கருதப்படும் .
தற்போது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளன. அடையாளக் குறியீடு 28 செல்சியஸ் டிகிரியில் இருந்து 0.5 அதிகரித்துள்ளதே இந்த் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு காரணமாகும்
இந்த ஆண்டு உச்சத்தை எட்டும் எல் நினோ
இரு அசுரனாக உருவெடுத்துள்ள இந்த எல் நினோ , அடுத்த ஆண்டு மார்ச் 2027மாதம் வரை எல் நினோ நீடிப்பதற்கு 85% முதல் 98% வரை வாய்ப்புகள் உள்ளதாக அதன் புதிய கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த எல் நினோ சூழல் கடந்த ஜூன் மாதமே நிலைபெற்றுவிட்டதாகவும், ஜூலை - செப்டம்பர் காலகட்டத்திற்குள் இது ஒரு ‘வலுவான எல் நினோவாக’ மாறக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு ,எல் நினோ 2024ஆம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு தகவல்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுவாக ஒரு மாதத்திற்கு கடல் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது அந்த வெப்பத்திற்கு வளிமண்டலம் பதிலளிக்கும் போது எல் நினோ தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள்.
எல் நினோ தமிழகத்திற்கு ஏற்படுத்தும் மாற்றம் என்ன ?
குறிப்பாக இந்த எல்நினோ தாக்கத்தால் பருவமழையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாவிட்டாலும் , வறட்சி ஏற்படுவத்ற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது , 1950ல் இருந்து தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி வந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறைகள் எல் நினோ காலத்தில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், உரிய நீர் கிடைக்காததாலும் , இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து வழக்கமான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகளை பாதிக்கும் எல் நினோ
வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சாகுபடி இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது, ஆறு , வாய்கால்களில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா விவாசாயிகளின் வாழ்வாதரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது , குறிப்பாக நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்க வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர்
பாசனத்திற்குத் போதிய தண்ணீர் கிடைக்காததால் டெல்டா விவசாயிகளுக்குப் பெருமளவு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது, இது அவர்களின் இயல்பு வாழ்கையை கேள்விகுறியாகியுள்ளது
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டு தெரிவித்துள்ளது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய காலப் பயிர்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது
அதிகரிக்கும் எல் நினோ உடல்நல பாதிப்புகள்
குறிப்பாக உலகளவில் எல்நினோவின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிதீவிரமான வெப்பன் காரணமாக ,மனித உடலில் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் செல்லும் போது அது கடுமையான உடல்நல பாதிப்புகளையும் , சிக்கலையும் ஏற்படுத்தும். ,பொதுவாக ,வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் கொண்டு இந்த வெட் பல்ப் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது
எல்நினோ தாக்கத்தால் , சென்னையில் தற்போது 32 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. 35 டிகிரிக்கு மேல் இந்த வெப்பநிலை செல்லும்போது மனிதர்களின் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்து ,வறண்ட காற்றின் காரணமாக வியர்வை ஏதும் வராது. குளிர்சாதன வசதி இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாத நிலை உருவாக்கும்.
இந்த சூழலில் இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் சென்னைக்கு இயல்பை விட கடுமையான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது
இருவித பாதிப்புகளை எதிர்கொள்ளும் தமிழகம்
அதாவது வடகிழக்கு பருவமழையின் போது கடுமையான மழை பெய்யக்கூடும் . பல மணி நேரம் பெய்ய வேண்டிய மழை , சில மணிகளில் கொட்டித்தீர்த்து பெரு வெள்ளத்தை ஏற்படுத்தகூடும் , வட மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் என இரண்டு விதமான பாதிப்புகளை தமிழகம் எதிர்கொள்ள இருக்கிறது.
========================