நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள், தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? : மத்திய-மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

நேபாள பேரழிவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எயுப்பி உள்ளது.
Chennai highcourt asks centre and states to clarifies the steps that have been taken so far on nepal incident
Chennai highcourt asks centre and states to clarifies the steps that have been taken so far on nepal incidentAi Generated
1 min read

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் :

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியதோடு, ஆயிரக்கணக்கானோரை காணாமல் போகச் செய்துள்ளது.

இந்த பேரிடரில் இந்தியர்கள், குறிப்பாக கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற தமிழர்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழர்களின் நிலை என்ன?

மீட்கப்பட்டவர்களில் ஒரு குழுவைச் சேர்ந்த 21 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் டெல்லி வழியாக சென்னை திரும்பியுள்ளனர்.

அவர்கள் வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தை நேரில் கண்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி :

இந்த சூழ்நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன? காணாமல் போனவர்களை கண்டறிய என்ன முயற்சிகள் நடைபெற்று வருகின்றன? என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 85 தமிழர்களின் நிலை குறித்து குறிப்பாக விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் :

இந்திய வெளியுறவு அமைச்சகம், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியா, நேபாளம் மற்றும் பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு அரசின் அவசர நடவடிக்கை :

தமிழக அரசு சார்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பாக உதவி எண்கள் அறிவிப்பு மற்றும் அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் நிலையை அறிய தொடர்ந்து மத்திய அரசுடன் இனைந்து அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து கொண்டு இருந்தது .

அதுமட்டுமல்லமல் டெல்லிக்கு தமிழக அரசாங்கம் சார்பில் முக்கியமான அமைச்சர்களை அனுப்பி மத்திய அமைச்சர்களையும் வெளியுறவுத்துறை அதிகாரியும் சந்தித்து தமிழ்நாடு பவனில் அவர்களை மீட்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தது

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in