
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு :
Chennai IIT Madras First in NIRF Ranking 2025 List : தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு(National Institutional Ranking Framework) செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.
டாப் 10 சிறந்த கல்வி நிறுவனங்கள் :
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில்(Top 10 in NIRF Ranking 2025 List) இடம்பெற, இந்தியா முழுவதும் இருந்து 8 ஆயிரத்து 686 நிறுவனங்கள் போட்டியிட்டன. அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு ஆகியவற்றை கொண்டு தரவரிசை பட்டியலிடப்பட்டது. அதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன.
சென்னை ஐஐடி முதலிடம் :
ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில்(NIRF Ranking 2025 IIT), சென்னை ஐஐடி இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஐஐஎஸ் பெங்களூரு 2வது இடமும், ஐஐடி மும்பை 3வது இடமும், ஐஐடி டில்லி 4ம் இடத்தையும், ஐஐடி கான்பூர் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.
டாப் 10 கல்வி நிறுவனங்கள்(Top 10 IIT Institutes in India) வரிசையில், ஐஐடி கரக்பூர், ஐஐடி ரூர்க்கி, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி, பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.
டாப் 10 பல்கலைக்கழகங்கள் :
டாப் 10 பல்கலைக்கழங்களில் தமிழகத்தை சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம்(Top 10 Universities in NIRF Ranking 2025 List), கோவை, இடம்பிடித்து இருக்கிறது.
1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி
3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால்
4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டில்லி
5. டில்லி பல்கலை, டில்லி
6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,
7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி
8. அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை,
9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா
10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்
டாப் 10 கல்லூரிகள் பட்டியல் :
டாப் 10 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு கல்லூரிகள்(Top 10 Colleges in NIRF Ranking 2025 List) இடம்பெற்று இருக்கின்றன.
1.ஹிந்து கல்லூரி, டில்லி
2.மிராண்டா ஹவுஸ், டில்லி
3.ஹான்ஸ் ராஜ் கல்லூரி, டில்லி
4. கிரோரி மால் கல்லூரி, டில்லி
5.செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டில்லி
6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கோல்கட்டா,
மேலும் படிக்க : 10 முக்கிய விநாயகர் கோவில்கள் : கட்டாயம் சென்று வாருங்கள்
7. ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரி, டில்லி
8. சேவியர் கல்லூரி, கோல்கட்டா
9.பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை,
10. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை,
===============